»   »  துன்புறுத்தப்பட்ட நடிகைக்கு பக்க பலமாக நின்ற இயக்குநர்!

துன்புறுத்தப்பட்ட நடிகைக்கு பக்க பலமாக நின்ற இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடத்தல், பாலியல் தொல்லைக்கு ஆளான பாவனாவுக்கு இக்கட்டான நேரத்தில் பக்க பலமாய் இருந்து போலீஸ் நடவடிக்கை எடுக்க உதவி செய்துள்ளார் நடிகரும் இயக்குநருமான லால்.

லால் தமிழில் 'சண்டைக்கோழி', 'தீபாவளி' உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர். தீபாவளி' படத்தில் நடிகை பாவனாவுக்கு அவர் தந்தையாக நடித்திருந்தார்.

Lal helps the actress

பாவனா தன்னிடம் உதவி கேட்டு வந்த சம்பவத்தை அவர் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "இது ஒரு மோசமான, மனிதத் தன்மையற்ற சம்பவம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அன்று இரவு எனது வீட்டிற்கு வந்து தனக்கு நடந்த கொடுமைப் பற்றி பாவனா கூறியபோது அதிர்ந்து போனேன். இதுபற்றி கேரள டி.ஜி.பி.யைத் தொடர்பு கொண்டு புகார் செய்தேன். அவர் உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளை எனது வீட்டிற்கு அனுப்பி நடவடிக்கை எடுத்தார்.

மறுநாள் இந்த சம்பவம் பற்றி ஊடகங்களில் தகவல் வெளியானது. இதனால் பாவனா மிகவும் மனவேதனை அடைந்தார். புகாரை வாபஸ் வாங்கி விடலாம் என்றுகூட நினைத்தார். ஆனால் அவரிடம் போலீஸ் டி.ஜி.பி. இதுபோல 3 சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் யாரும் புகார் கொடுக்கவில்லை. இந்த புகார் மூலம் உங்களுக்கு சிக்கல் வராது.. குற்றவாளிகளையும் பிடித்து தண்டிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.

இதன்பிறகே அவர் சமாதானமடைந்தார். இந்த கொடிய செயலில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாவனாவுக்கு முழுப் பாதுகாப்பு வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்," என்றார்.

English summary
Actor - Director Lal who helped actress Bhavana has shared how the actress came to his residence after abduction.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil