»   »  காணாமல் போன எங்க வீட்டு பிள்ளை கிடைத்துவிட்டாள்: பிரகாஷ் ராஜ்

காணாமல் போன எங்க வீட்டு பிள்ளை கிடைத்துவிட்டாள்: பிரகாஷ் ராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் காணாமல் போன அப்ரினா பெங்களூரில் கிடைத்துள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜின் முன்னாள் மனைவியான லலிதா குமாரியின் அண்ணன் மகள் அப்ரினா சென்னை சர்ச் பார்க் பள்ளியில் படித்து வருகிறார்.

கடந்த 6ம் தேதி பள்ளிக்கு சென்ற அப்ரினா மாயமாகினார். பள்ளி நிர்வாகத்தாரும் சரியான பதில் அளிக்கவில்லை என்ற புகார் எழுந்தது.

ட்விட்டர்

ட்விட்டர்

அப்ரினாவை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு லலிதா குமாரி போலீசில் புகார் அளித்தார். மேலும் அவரை கண்டுபிடிக்க உதவுமாறு திரையுலக பிரபலங்களும் ட்விட்டரில் தெரிவித்தனர்.

லலிதா

லலிதா

அப்ரினாவை காணவில்லை, பள்ளி நிர்வாகம் சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறி லலிதா குமாரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அப்ரினாவின் தாய் உடனிருந்தார்.

அப்ரினா

அப்ரினா கிடைத்துவிட்டார் என்பதை பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அப்ரினாவை கண்டுபிடிக்க முயற்சி செய்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ்

முன்னதாக அப்ரினா காணாமல் போனபோது அவரை கண்டுபிடிக்க உதவி செய்யுமாறு ட்விட்டரில் தெரிவித்திருந்தார் பிரகாஷ் ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் காணாமல் போன அப்ரினா பெங்களூரில் கிடைத்துள்ளார்.

English summary
Actress Lalitha Kumari's niece Abrina who went missing in Chennai was found in Bengaluru.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil