twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எத்தனை இந்திரா காந்திப்பா.. கேஜிஎஃபை தொடர்ந்து பெல்பாட்டம் படத்திலும் அப்படியொரு ரோல்!

    |

    மும்பை: இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியை மையமாக வைத்து ஏகப்பட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

    கேஜிஎஃப் 2 படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை ரவீணா டான்டன் நடித்துள்ள நிலையில், அக்‌ஷய் குமாரின் பெல் பாட்டம் படத்திலும் பாலிவுட் நடிகை லாரா தத்தா இந்திரா காந்தியாக நடித்துள்ளார்.

    விரைவில் வெளியாக உள்ள அந்த படத்தில் இந்திரா காந்தியின் கதாபாத்திரம் எப்படி கையாளப்பட்டு இருக்கிறது என்பது குறித்து இயக்குநர் ரஞ்சித் எம். திவாரி விளக்கி உள்ளார்.

    சார்பட்டா பரம்பரை பாகம்-2... தீவிரம் எடுக்கும் இயக்குனர் பா. ரஞ்சித்! சார்பட்டா பரம்பரை பாகம்-2... தீவிரம் எடுக்கும் இயக்குனர் பா. ரஞ்சித்!

    பெல் பாட்டம்

    பெல் பாட்டம்

    கொரோனா காலத்தில் நாடு முழுவதும் படத்தின் ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஸ்பெஷல் அனுமதி பெற்று நடிகர் அக்‌ஷய் குமார் வெளிநாட்டுக்கு படக்குழுவுடன் சென்று இந்த பெல் பாட்டம் படத்தை எடுத்து முடித்தார். இன்று திரையரங்குகளில் அந்த படம் வெளியாகி இருக்கிறது.

    தியேட்டர்கள் திறப்பு

    தியேட்டர்கள் திறப்பு

    வட இந்தியாவில் பல இடங்களில் மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், முதல் படமாக அக்‌ஷய் குமாரின் பெல் பாட்டம் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. நாடு முழுவதும் விரைவில் அனைத்து தியேட்டர்களும் திறக்கப்படும் என்கிற அறிவிப்புகளும் வரவிருப்பதால் ஏகப்பட்ட பெரிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன.

    பீரியட் ஃபிலிம்

    பீரியட் ஃபிலிம்

    1980களில் நடக்கும் பீரியட் டிராமா படம் தான் அக்‌ஷய் குமாரின் பெல் பாட்டம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி கபூர் நடித்துள்ளார். மேலும், லாரா தத்தா மற்றும் ஹூமா குரேஷி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தலைவாசல் விஜய்யும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    என்ன கதை

    என்ன கதை

    200 பயணிகளுடன் கடத்தப்பட்ட விமானத்தை கண்டுபிடித்து மீட்கும் பொறுப்பு ரா ஏஜென்ட்டான அக்‌ஷய் குமாருக்கு வழங்கப்படுகிறது. அவர் அந்த மிஷினை எப்படி வெற்றிகரமாக செய்து அனைவரையும் காப்பாற்றினாரா? இல்லையா என்பது தான் பெல் பாட்டம் படத்தின் கதை.

    இந்திரா காந்தியாக

    இந்திரா காந்தியாக

    தல அஜித் உடன் யுக்தா முகி பாடலுக்கு நடனமாடிய பிரபல பாலிவுட் நடிகை லாரா தத்தா இந்த படத்தில் இந்திரா காந்தியாக நடித்துள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் கதாபாத்திரம் என்பதால், மிகவும் பொறுப்புடன் அவரது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டு இருப்பதாகவும், எந்த சர்ச்சைகளும் கிளம்பிவிடக் கூடாது என்பதில் படக்குழு உறுதியாக இருந்ததாகவும் நடிகை லாரா தத்தா கச்சிதமாக அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும் இயக்குநர் ரஞ்சித் திவாரி பேட்டி அளித்துள்ளார்.

    எந்த ’கட்’டும் இல்லை

    எந்த ’கட்’டும் இல்லை

    பீரியட் ஃபிலிம் என்பதால் எந்தவொரு பிழையும் செய்து விடக் கூடாது என மிகவும் கவனமுடன் பணியாற்றி உள்ளோம். எங்களுடைய படத்தை பார்த்த தணிக்கை குழுவினரும் எந்தவொரு 'கட்'டும் கொடுக்காமல் படத்திற்கு சான்றிதழ் அளித்துள்ளனர். நிச்சயம் படம் ரசிகர்களை திருப்தி படுத்தும் என நம்புகிறோம் எனக் கூறியுள்ளார்.

    கேஜிஎஃப் 2விலும்

    கேஜிஎஃப் 2விலும்

    பெல் பாட்டம் படத்திற்கு முன்னதாகவே கேஜிஎஃப் முதல் பாகத்தில் இந்திரா காந்தியின் கதாபாத்திரம் இடம் பெற்றிருக்கும். கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் ஆளவந்தான் படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் நடித்துள்ளார். கேஜிஎஃப் 2 டீசரிலும் அவரது காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

    எத்தனை இந்திரா?

    எத்தனை இந்திரா?

    இந்திரா காந்தி காலத்தில் போடப்பட்ட எமர்ஜென்சியை வைத்து ஏகப்பட்ட படங்களில் இந்திரா காந்தியின் ரியல் வீடியோக்களையே பயன்படுத்தி படமாக்கி வருகின்றனர். இந்நிலையில், லாரா தத்தா, ரவீணா டாண்டன் என பல நடிகைகள் இந்திர காந்தியாகவே நடித்து வருகின்றனர். இந்திரா காந்தியின் பயோபிக் இன்னமும் எடுக்காத நிலையில், சீக்கிரமே இன்னொரு நடிகையும் இந்திரா காந்தியாக தோன்றுவாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

    English summary
    Bollywood actresses Lara Dutta and Raveena Tandon portrays Former Prime Minister Indira Gandhi role in Bell Bottom and KGF Chapter 2 movies respectively.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X