»   »  பஞ்சு அருணாச்சலத்துக்கு நாளை இறுதி அஞ்சலி... 4 மணிக்கு உடல் தகனம்

பஞ்சு அருணாச்சலத்துக்கு நாளை இறுதி அஞ்சலி... 4 மணிக்கு உடல் தகனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த திரையுலக ஜாம்பவான் பஞ்சு அருணாச்சலத்தின் உடல் நாளை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. நாளை மாலை தகனம் செய்யப்படுகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர், இயக்குநர், கதை வசனகர்த்தாவாகத் திகழ்ந்த பஞ்சு அருணாச்சலம் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார்.

Last rites of Panchu Arunachalam to be held on Thursday

அவருக்கு திரையுலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது. பஞ்சு அருணாச்சலத்தின் மகன் மற்றும் மகள் அமெரிக்காவிலிருந்து வரவேண்டும் என்பதால், நேற்று மாலை பஞ்சு அருணாச்சலத்தின் உடல் சென்னை பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

நாளை காலை 7 மணிக்கு பஞ்சு அருணாச்சலத்தின் உடல் தி நகர் பாகீரதி அம்மாள் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

மாலை 4 மணிக்கு கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் தகனம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The last rites of ate legend Panchu Arunachalam will be held on Tomorrow evening.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil