லதா மங்கேஷ்கர் இப்போ எப்படி இருக்கிறார்... டாக்டர் கொடுத்த ஹெல்த் அப்டேட்

மும்பை : ஐசியு.,வில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது என்பது பற்றிய அப்டேட்டை மருத்துவமனை டாக்டர் வெளியிட்டுள்ளார்.

மெலடி குயின், இந்திய நைட்டிங்கேள் என அனைவராலும் புகழப்படுபவர் லதா மங்கேஷ்கர். 1942ம் ஆண்டு தன்னுடைய 13வது வயதில் தன்னுடைய இசை பயணத்தை லதா மங்கேஷ்கர் துவக்கினார். கடந்த 80 வருடங்களாக பல்வேறு மொழிகளில் 30,000 க்கும் அதிகமான பாடல்களை அவர் பாடி உள்ளார்.

லதா மங்கேஷ்கருக்கு கொரோனா

லதா மங்கேஷ்கருக்கு கொரோனா

லதா மங்கேஷ்கருக்கு ஜனவரி 8ம் தேதி லேசான கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதால் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் உடனடியாக மும்பையில் உள்ள பீர்ச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

என்னது சீரியசா இருக்காரா

என்னது சீரியசா இருக்காரா

வயது முதிர்வின் காரணமாக ஐசியு.,வில் வைத்து லதா மங்கேஷ்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல் பரவியது. ஆனால் அது உண்மையில்லை என பிறகு அவரது செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்தார்.

வதந்திகளை பரப்பாதீர்கள்

வதந்திகளை பரப்பாதீர்கள்

அவர் கூறுகையில், தவறான செய்திகள் பரவி வருவது வேதனை அளிக்கிறது. லதா மங்கேஷ்கரின் உடல்நிலை சீராக உள்ளது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள். தொடர்ந்து ஐசியு.,வில் வைத்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப தயவு செய்து அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என கேட்டுக் கொண்டார்.

ஹெல்த் அப்டேட் தந்த டாக்டர்

ஹெல்த் அப்டேட் தந்த டாக்டர்

இது போன்ற தவறான தகவல்கள் பரவி வருவதால் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது என்பது பற்றி அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் அனுஷா ஸ்ரீநிவாசன் ஐய்யரே அப்டேட் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை சீராக உள்ளது. டாக்டர்கள் குழு ஒப்புதல் அளித்த பிறகு அவர் வீடு திரும்புவார் என்றார்.

பிரார்த்தனை செய்யுங்கள்

பிரார்த்தனை செய்யுங்கள்

மருத்துவமனை டாக்டர் பிரதித் சம்தானி கூறுகையில், லதா மங்கேஷ்கர் தற்போது வரை ஐசியு.,வில் தான் உள்ளார். அவர் விரைவில் குணமடைவதற்காக எங்களால் முயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம். அவர் விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X