twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவாஜி குடும்பத்தில் சொத்து பிரச்சனை...பிரபு, ராம்குமாருக்கு எதிராக சகோதரிகள் வழக்கு

    |

    சென்னை : தந்தை சொத்தில் பங்கு தராமல் ஏமாற்றிவிட்டதாக நடிகர் பிரபு, அவரது சகோதரர் ராம்குமார் மீது குற்றம் சாட்டி மறைந்த நடிகர் சிவாஜிகணேசனின் மகள்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    Recommended Video

    Sivaji குடும்பத்தில் சொத்து பிரச்சனை... Prabhu, Ramkumar-க்கு எதிராக வழக்கு *India

    மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசன் பராசக்தி படத்தில் துவங்கி நுற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். நடிகர் திலகம் என அனைவராலும் போற்றப்படும் சிவாஜி, நடிகராகவும் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருந்தவர். இவருக்கு பிரபு,ராம்குமார் என இரு மகன்களும்; சாந்தி,ராஜ்வி என இரு மகள்களும் உள்ளனர்.

    பிரபு, ராம்குமார் இருவருமே படங்களில் நடித்துள்ளனர். பிரபு தற்போது வரை பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ராம்குமார், தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சிவாஜி, பிரபுவை தொடர்ந்து முன்றாம் தலைமுறையாக நடிகர் விக்ரம் பிரபுவும் தற்போது பிரபல ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.

    சிவாஜி சொன்ன குட்டி ஸ்டோரியால் கண் கலங்கிய கமல்... என்ன ஸ்டோரி, ஏன் சொன்னார் தெரியுமா?சிவாஜி சொன்ன குட்டி ஸ்டோரியால் கண் கலங்கிய கமல்... என்ன ஸ்டோரி, ஏன் சொன்னார் தெரியுமா?

    சிவாஜி மகள்கள் வழக்கு

    சிவாஜி மகள்கள் வழக்கு

    கடந்த 2001ம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின், 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    சொத்தில் பங்கு தராமல் ஏமாற்றிவிட்டனர்

    சொத்தில் பங்கு தராமல் ஏமாற்றிவிட்டனர்

    இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தம் காரணமாக தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கும் உரிமை உள்ளதால் பாகப்பிரிவினை செய்து தர உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளனர்.மேலும், தங்களுக்கு தெரியாமல் தந்தை சொத்துக்களை விற்றுள்ளதாகவும், அந்த விற்பனை பத்திரங்களை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    சிவாஜியின் உயில் பொய்யானது

    சிவாஜியின் உயில் பொய்யானது

    ஆயிரம் சவரன் தங்க நகைகளையும், 500 கிலோ வெள்ளி பொருட்களையும் பிரபுவும், ராம்குமாரும் அபகரித்துக் கொண்டதாகவும், சாந்தி தியேட்டரில் இருந்த 82 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பிரபுவும், ராம்குமாரும் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டதாகவும் கூறியுள்ளனர்.நடிகர் சிவாஜி கணேசன் எழுதி வைத்ததாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது எனவும், பொது அதிகார பத்திரத்தில் கையெழுத்து பெற்று தங்களை ஏமாற்றி விட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விக்ரம் பிரபு மீதும் வழக்கு

    விக்ரம் பிரபு மீதும் வழக்கு


    இந்த வழக்கில் நடிகர் பிரபு, ராம்குமார் தவிர, இருவரின் மகன்களாக விக்ரம் பிரபு மற்றும் துஷ்யந்த் ஆகியோரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.சிவாஜி குடும்பத்தில் இப்படி ஒரு சொத்து பிரச்சனை நடந்து, அது கோர்ட் வரை சென்றுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    அடுத்து என்ன நடக்க போகிறது

    அடுத்து என்ன நடக்க போகிறது

    சகோதரிகள் தொடர்ந்த வழக்கை சிவாஜி குடும்பத்தினர் எவ்வாறு எதிர்கொள்ள போகிறார்கள். இந்த வழக்கில் கோர்ட் என்ன முடிவெடுக்கும் என்பதை தெரிந்து கொள்ள கோலிவுட்டே பதற்றத்துடன் காத்திருக்கிறது.

    English summary
    Late actor Sivaji Ganeshan's daughters filed case against their brothers Prabhu and Ramkumar. They said that Prabhu and Ramkumar cheated them. They denied to give share their father's property. Not only Prabhu, his son Vikram Prabhu's name also included in this case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X