twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வேறு ஒரு ரயிலில் ஏறிவிட்டாயே சுஷாந்த்.. சுஷாந்த் நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த டாப் 5 படங்கள்!

    |

    சென்னை: டிவி நடிகராக போராட்டமான வாழ்க்கையை தொடங்கி, தனது திறமையால் சீக்கிரமே பாலிவுட்டின் ஹாட் ஹீரோவாக மாறிய சுஷாந்த் சிங், மன அழுத்தம் காரணமாக இவ்வளவு சீக்கிரமாக உயிரை மாய்த்துக் கொள்வார் என யாருமே எதிர்பார்க்க வில்லை.

    Recommended Video

    Best films of Sushant Singh Rajput that remains unforgettable

    எம்.எஸ். தோனி மட்டுமின்றி அமீர்கானின் பிரம்மாண்ட படமான பிகே படத்திலும் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்துள்ளார்.

    தனது குழந்தைத் தனம் மாறாத நடிப்பால் ரசிகர்களை சிரிக்க வைத்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் டாப் 5 படங்கள் குறித்த தொகுப்பை இங்கே காண்போம்.

    அந்தப் படத்துல் அப்படி நடிச்சுட்டு..இப்படி ஒரு முடிவை எடுத்துட்டிங்களே சுஷாந்த்..கலங்கும் ரசிகர்கள்!அந்தப் படத்துல் அப்படி நடிச்சுட்டு..இப்படி ஒரு முடிவை எடுத்துட்டிங்களே சுஷாந்த்..கலங்கும் ரசிகர்கள்!

    ஆரம்பமே அசத்தல்

    ஆரம்பமே அசத்தல்

    இயக்குநர் அபிஷேக் கபூர் இயக்கத்தில் ரோனி ஸ்க்ரூவாலா தயாரிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான கை போச்சே படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார் சுஷாந்த் சிங் ராஜ்புத். பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத் எழுதிய 3 மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப் என்ற நாவலை தழுவி உருவான இந்த படத்திற்காக அறிமுக நடிகர் விருதையும் தட்டிச் சென்றார் சுஷாந்த்.

    அமீர்கானுடன்

    அமீர்கானுடன்

    ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர்கான், அனுஷ்கா ஷர்மா நடிப்பில் 2014ம் ஆண்டு வெளியான பிகே படத்தில் அனுஷ்கா ஷர்மாவின் காதலராக நடித்து சர்வதேச அரங்கில் பாராட்டுக்களை அள்ளியிருப்பார் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அந்த படத்திற்கு பிறகு பாலிவுட் நடிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்ட சுஷாந்துக்கு தோனி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி

    எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி

    பாலிவுட்டில் நுழைந்த வெகு சீக்கிரமாகவே தனது ஆத்மார்த்தமான நடிப்பு மற்றும் துடிப்பால் முன்னணி ஹீரோ அந்தஸ்த்துக்கு உயர்ந்தார் சுஷாந்த் சிங் ராஜ்புத். 200 கோடி ரூபாய் வசூல் செய்த தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் கிரிக்கெட் வீரர் தோனியின் மேனரிஸத்தை அப்படியே செய்து அசத்தி இருப்பார். தோனி பல மேடைகளில் இவரது நடிப்பை வெகுவாக பாராட்டி இருந்தார். இவரது இழப்பு தோனிக்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது.

    மகதீரா கதை

    மகதீரா கதை

    இயக்குநர் தினேஷ் விஜயன் இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், ராஜ்குமார் ராவ், க்ரித்தி சனோன் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான ராப்டா படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால், இந்த படத்தின் கதை ராஜமெளலி இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான மகதீரா படத்தின் கதை என அல்லு அரவிந்த் மற்றும் கீதா ஆர்ட்ஸ் இந்த படத்துக்கு எதிராக சர்ச்சையை கிளப்பினர்.

    கடைசி படம்

    கடைசி படம்

    சுஷாந்த் சிங் நடிப்பில் இன்னமும் வெளிவராத படமாக ஹேப்பி ஆனிவர்ஸரி படம் இருக்கிறது. இயக்குநர் பிரகலாத் கக்கர் இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ரியா சக்கரபார்த்தி, அமைரா தஸ்தூர், ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், சுஸ்மிதா சென் என பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

    English summary
    Sushant Singh Rajput starred Kai Poche, PK, MS Dhoni: The Untold Story, Raabta and many more movies always remembered by his audience.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X