twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டி.பி.கஜேந்திரன் எனும் நான்.. என்னப்பத்தி புக் போடுற அளவுக்கு ஒன்றுமில்லை.. இதுதான் நான்!

    |

    சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்த பிரபல தமிழ் சினிமா இயக்குநர் டி.பி. கஜேந்திரன் தன்னைப் பற்றி எழுதிய கட்டுரை சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    என்னை பத்தி புக் போடுற அளவுக்கு எல்லாம் ஒன்றுமே சாதிக்கவில்லை. இதுதான் நான் என டி.பி. கஜேந்திரன் தனது வாழ்க்கை பயணத்தை பற்றி மிகவும் விளக்கமாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் சொல்லிய விஷயங்கள் தற்போது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    கடைசி வரை ரசிகர்களை கலகலப்பாக வைத்துக் கொண்ட இயக்குநர் டி.பி. கஜேந்திரன் அவரை பற்றி அவரே எழுதிய விஷயங்கள் குறித்து இங்கே காண்போம்..

    அய்யோ ஆண்டவா.. இதோட நிறுத்திக்கோ.. டி.பி. கஜேந்திரன் மறைவு.. மனவேதனையில் மனோபாலா அய்யோ ஆண்டவா.. இதோட நிறுத்திக்கோ.. டி.பி. கஜேந்திரன் மறைவு.. மனவேதனையில் மனோபாலா

    டி.பி. கஜேந்திரன் சுயசரிதை

    டி.பி. கஜேந்திரன் சுயசரிதை

    அன்பு நண்பர்களுக்கு வணக்கம், எனது படங்கள் பற்றி நீங்கள் படிக்கும் முன், என்னைப் பற்றி நீங்கள் முழுமையாகத் தெரிந்து கொள்வது நலமாக இருக்கும் என்று கருதுகிறேன். எனது வாழ்க்கை புத்தகம் போடுகிற அளவிற்கோ, சுயசரிதை எழுதுகிற அளவிற்கோ பெரிதல்ல. ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கைதான் என்னுடையதும். உங்கள் வசதிக்காகச் சுருக்கமாகச் சொல்கிறேன்.

    சென்னையில் பிறந்தேன்

    சென்னையில் பிறந்தேன்

    ''பூர்வீகம் தூத்துக்குடி. பிறந்தது, சென்னை கோஷா ஆஸ்பத்திரியில். 8 -ம் வகுப்பு வரை சென்னை, ஆவிச்சி பள்ளியில்தான் படித்தேன். படிப்பு சரியாக வராமல் சினிமா ஸ்டூடியோக்களைச் சுற்றிக்கொண்டு திரிஞ்சேன். அப்பாவுக்கும் சினிமா கம்பெனியில வேலைங்றதால ப்ரிவியூ ஷோக்களைப் பார்த்துவிட்டு உதார் விட்டுக் கொண்டு திரிந்தேன்.

    கிராமத்தில் படித்தேன்

    கிராமத்தில் படித்தேன்

    மகன் மெட்ராசுல இருந்தா படிக்க மாட்டான்னு, அப்பா என்னைக் காரைக்குடி பக்கம் உள்ள கண்டனூர் புதுவயலுக்கு அனுப்பி வச்சாரு. அங்க என்னோட சித்தப்பா வருவாய் அதிகாரியா இருந்தாரு. அவரோட பிள்ளைங்க நல்லா படிப்பாங்க. அவங்கக்கூடப் படிச்சா நல்லா படிப்பேன்னு என்னைய அங்க அனுப்பி வச்சாரு. பட்டணத்துப் பையன் பட்டிக்காட்டுக்குப் போறதான்னு ரொம்ப வீம்பு பண்ணிப் பார்த்தேன் ஒண்ணும் நடக்கல... வலுக்கட்டாயமாக டி.சியைக்கூட வாங்காம அனுப்பி வச்சாங்க. புதுவயல் ராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில 9 - ம் வகுப்புல சேர்ந்தேன். சென்னைப் படிப்பு வேற, கிராமத்துப் படிப்பு வேற. சென்னை ஆவிச்சி பள்ளியில கடைசிப் பெஞ்சில் இருந்த நான் புதுவயல் பள்ளியில முதல் பெஞ்சுக்கு வந்தேன். அட, இதுகூட நல்லாத்தான் இருக்குன்னு அந்தச் சூழ்நிலைய ஏத்துக்கிட்டேன். மகன் மெட்ராசுல இருந்தா படிக்க மாட்டான்னு, அப்பா என்னைக் காரைக்குடி பக்கம் உள்ள கண்டனூர் புதுவயலுக்கு அனுப்பி வச்சாரு. அங்க என்னோட சித்தப்பா வருவாய் அதிகாரியா இருந்தாரு. அவரோட பிள்ளைங்க நல்லா படிப்பாங்க. அவங்கக்கூடப் படிச்சா நல்லா படிப்பேன்னு என்னைய அங்க அனுப்பி வச்சாரு. பட்டணத்துப் பையன் பட்டிக்காட்டுக்குப் போறதான்னு ரொம்ப வீம்பு பண்ணிப் பார்த்தேன் ஒண்ணும் நடக்கல... வலுக்கட்டாயமாக டி.சியைக்கூட வாங்காம அனுப்பி வச்சாங்க. புதுவயல் ராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில 9 - ம் வகுப்புல சேர்ந்தேன். சென்னைப் படிப்பு வேற, கிராமத்துப் படிப்பு வேற. சென்னை ஆவிச்சி பள்ளியில கடைசிப் பெஞ்சில் இருந்த நான் புதுவயல் பள்ளியில முதல் பெஞ்சுக்கு வந்தேன். அட, இதுகூட நல்லாத்தான் இருக்குன்னு அந்தச் சூழ்நிலைய ஏத்துக்கிட்டேன்.

    மைனர் மாதிரி

    மைனர் மாதிரி

    சென்னையிலேருந்து சென்றதால் உள்ளூரில் ஒரு மைனருக்கான மதிப்பு கிடைச்சுது. அதிலும் நான் விதவிதமா சட்டை போடுவேன். அதுவே என்னை வில்லேஜ் ஹீரோவாக்கியது. அதுவே பக்கத்து வீட்டு பெண்ணுடன் காதலையும் உருவாக்கியது. கடைசியில அந்தப் பொண்ணு என் காதலை கடாசிட்டு கணக்கு சொல்லிக் கொடுத்த வாத்தியாரோட ஒடிப்போனது தனிக்கதை. எனக்குள் கலை தாகத்தை விதைச்சதும் இந்த ஊர்தான். அப்போ பள்ளியில 'சாணக்கியன்' நாடகம் போட ஏற்பாடு பண்ணிக்கிட்டிருந்தாங்க. நான்தான் சாணக்கியன் வேடம் போடுறதா முடிவு. இதுக்காக 40 பக்க வசனத்தை உருபோட்டுப் பயிற்சி எடுத்திருந்தேன்.

    பெண்ணை கிண்டல் செய்து

    பெண்ணை கிண்டல் செய்து

    நாடகத்துக்கு ஒத்திகையெல்லாம் நடந்து முடிஞ்சிருந்த நேரம். அப்போ ஒரு மாணவியைப் பார்த்து கிண்டல் பண்ணினது பெரிய பிரச்னையாயிடுச்சு. அந்த மாணவி பேரு சின்னம்மா. நான் "சிரிப்பென்ன சிரிப்பென்ன சின்னம்மா உன் சிருங்காரம் மின்னுவதென்ன சின்னம்மா"ன்னு பாடப் போக அது அழுதுகிட்டே ஊரைக் கூட்ட ஸ்கூல் என்னைச் சஸ்பெண்ட் பண்ணிடுச்சு.

    சாணக்கியன் நாடகம்

    சாணக்கியன் நாடகம்

    பசங்க ரொம்ப வருத்தப்பட்டாங்க. 'டேய் ஒரே நாள்ல சஸ்பெண்ட் உத்தரவ உடைச்சுக் காட்டுறேன்'னு சவால்விட்டேன். காரணம், அடுத்த நாள் ஸ்கூல்ல 'சாணக்கியன்' நாடகம். நான் இல்லாம நாடகம் போட முடியாது. காரணம், சாணக்கியனே நான்தான். ஒரே நாள்ல ஆளை மாத்தி 40 பக்க வசனத்தை யாரையும் பேச வைக்க முடியாது.
    நினைச்ச மாதிரி வாத்தியார் பதறியடிச்சு ஓடிவந்தார். 'சஸ்பென்ட் ஆர்டரை கேன்சல் பண்ணுங்க, வந்து நடிச்சு தர்றேன்'னு சொன்னேன். அவரும் செய்தார். ஒரு கலைக்கும், கலைஞனுக்குமான மதிப்பு அப்போதான் தெரிஞ்சுது. ஆனாலும் சித்தப்பா இனி இவன் இங்க இருந்தான்னா நம்ம பேரையும் கெடுத்து நம்ம பிள்ளைங்க படிப்பையும் கெடுத்துடுவான்னு முடிவுபண்ணி சென்னைக்குப் பேக் பண்ணினார். மீண்டும் அதே ஆவிச்சி ஸ்கூல், பழைய ஃபிரண்டுகள் என்று பயணம் தொடர்ந்தது. சினிமாவுக்கான தேடுதலும் தொடர்ந்தது.

    சினிமாவில் காலடி எடுத்து வச்சேன்

    சினிமாவில் காலடி எடுத்து வச்சேன்

    1979 - ஆண்டில் திருமணம் நடந்துச்சு. அதே ஆண்டு, அதே மாதம் சினிமாவில் காலடி எடுத்து வச்சேன். 'மழலைப் பட்டாளம்' படம் கே.பாலச்சந்தர் தயாரிப்பு, லட்சுமி இயக்கினார். அந்தப் படத்தில் வேலை செய்'னு பாலச்சந்தர் சார் அனுப்பி வச்சார். அதற்குப் பிறகு 'தில்லு முல்லு', 'தண்ணீர் தண்ணீர்' படங்கள்ல அவரோட வேலை செஞ்சேன்.

    கேபி சார் அடிப்பார்

    கேபி சார் அடிப்பார்

    சினிமா கத்துக்கிட்டதும், வாழ்க்கையோட சில நெறிமுறைகளைக் கத்துக்கிட்டதும் அவர்கிட்டதான். கே.பி சாருக்குக் கோபம் வந்தால் முதுகில் 'முண்டம் முண்டம்' என்று சொல்லிக்கொண்டே அடிப்பார். சந்தோஷம் வந்தாலும், முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டே பாராட்டுவார்.

    ரஜினி ஸ்டைலே

    ரஜினி ஸ்டைலே

    அவர் கையால் குட்டுப்பட்டவன் என்று நிறையப் பேர் சொல்வார்கள். ஆனால், நிஜத்தில் குட்டுப்பட்டவன் நான்தான். காரணம் நான் உயரம் குறைவு என்பதால், அவரது கைவாகு என்னைக் குட்டத்தான் வரும். சந்தோஷம், கோபம் இரண்டுக்கும் குட்டுவார். கோபமாகக் குட்டும்போது வலிக்கும் அதுதான் வித்தியாசம். இன்னிக்கு நாம பார்க்குற ரஜினி ஸ்டைல் என்பது உண்மையில் பாலச்சந்தரின் ஸ்டைல்தான். அவரது ஷூட்டிங் பார்த்தாலே சினிமா பார்த்த அனுபவம் கிடைக்கும்.

    தில்லு முல்லு அனுபவம்

    தில்லு முல்லு அனுபவம்

    'தில்லு முல்லு' பட எடிட்டிங் நடந்துக்கிட்டிருந்துச்சு. நிறைய காட்சிகளைக் குறைக்கவேண்டி வந்தது. எப்போதும் கே.பிசார் காட்சிகளைக் குழந்தை மாதிரி நினைப்பார். கஷ்டப்பட்டு, செலவு பண்ணி எடுத்த காட்சிகளை நீக்குவது அவருக்குக் கஷ்டமான காரியம். அதானால்தான் திட்டமிட்டுப் படம் எடுப்பார். 'தில்லு முல்லு'வில் இந்தெந்த காட்சிகளை இவ்வளவு நீளம் குறைத்துக் கொள் என்று என்னிடம் எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். நானும் எடிட்டரும் உட்கார்ந்து எடிட் செய்ததில் நிறைய குறைந்து விட்டது. இப்போது சேர்க்க வேண்டும். அவரிடம் சொல்ல பயம். இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னேன். அவருக்கு ரொம்பச் சந்தோஷம் "டேய் காட்சியைக் கூட்டத்தானடா சொல்றே" என்று சந்தோஷமாகச் சொல்லி அவரே கூட்டினார். இப்படி அவருக்குள் ஒரு குழந்தை இருந்ததையும் நான் பார்த்திருக்கிறேன்.

    தண்ணீர் தண்ணீர் படம்

    தண்ணீர் தண்ணீர் படம்

    தண்ணீர் தண்ணீர்' படப்பிடிப்பின் போது ஒரு பாடல் காட்சி எடுக்க வேண்டியிருந்ததது. அந்தப் பாடலின் ஒலி நாடா என்னிடம் இருந்தது. அது நான் குளிக்கப்போன இடத்தில் தண்ணீரில் விழுந்து விட்டது. இதை டைரக்டரிடம் சொன்னால் சீட்டை கிழித்து விடுவார். சென்னையில் இருந்து வாங்கி வரவும் நேரமில்லை. அதனால் நாமாகவே ஓடிவிடுவோம் என்று சென்னைக்குக் கிளம்பி விட்டேன். கம்பெனி வண்டியில் சென்றால் தெரிந்து விடும் என்று நடந்தே கிளம்பினேன்.

    விசு சாரை சந்திக்கும் வாய்ப்பு

    விசு சாரை சந்திக்கும் வாய்ப்பு

    நான் சென்று கொண்டிருக்கும்போது படப்பிடிப்பு முடிந்து இயக்குனர் காரில் வந்து கொண்டிருந்தார். நான் நடந்து சென்று கொண்டிருப்பதைக் கண்டு காரில் ஏற்றி விஷயம் கேட்டார். சொன்னேன். அவரும் சிரித்தபடி "இது பெரிய விஷயமா அந்தக் காட்சியை எடுத்துவிட்டேன். பேசாமல் வா" என்று கூலாகச் சொன்னார். மறுநாள் நண்பர்களிடம் விசாரித்தபோது ஒலிநாடாவுக்குப் பதிலாக அவரே அந்தப் பாடல் வரிகளைத் தாளத்தோடு பாடி படமாக்கியதாகச் சொன்னார்கள். அப்போதுதான் ஒரு உயர்ந்த கலைஞனைத் தரிசித்தேன். பாலச்சந்தர் சாரின் படங்களில் பணியாற்றியபோது விசு சாரின் அறிமுகம் கிடைத்தது.

    சினிமாவை கற்றுக்கொண்டேன்

    சினிமாவை கற்றுக்கொண்டேன்

    அவரிடமும் சினிமா கற்றுக் கொண்டேன். 'சம்சாரம் அது மின்சாரம்' உள்படப் பல படங்களில் அவருடன் பணியாற்றினேன். அவர்மூலம்தான் முதல் படமான 'லக்கி ஸ்டார்' இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதன் பிறகு 'வீடு, மனைவி, மக்கள்', 'எங்க ஊரு காவக்காரன்', 'பாண்டி நாட்டுத் தங்கம்', 'எங்க ஊரு மாப்பிள்ளை', 'தாயா தாரமா', 'நல்ல காலம் பொறந்தாச்சு', 'பெண்கள் வீட்டின் கண்கள்', 'கொஞ்சும் கிளி', 'பாட்டு வாத்தியார்', 'பாசமுள்ள பாண்டியரே', 'பட்ஜெட் பத்மநாபன்', 'சீனா தானா', 'மகனே மறுமகனே' படங்களை இயக்கினேன். எல்லாமே வெற்றிப்படங்கள், குறைந்த பட்சம் தயாரிப்பாளருக்கு லாபம் தந்த படங்கள்.

    நடுத்தர மக்களின் பிரச்சனை

    நடுத்தர மக்களின் பிரச்சனை

    எனது படங்கள் பெரிய பொழுதுபோக்கான ஜனரஞ்சகப் படங்களும் இல்லை. பெரிய கலைப் படைப்புகளும் இல்லை. நடுத்தர மக்களின் பிரச்னைகளை நகைச்சுவையாகச் சொல்லி அதற்கு எளிய தீர்வையும் சொல்பவை. அதையே எனது பாணியாகவும் வைத்துக் கொண்டேன்.

    என் உருவம் தான் காரணம்

    என் உருவம் தான் காரணம்

    எனது உருவமும், பேச்சும் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தது. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் விட்டேன். 'பாரதி' படத்தில் 'குவளை கண்ணன்' கேரக்டரில் நடித்தது என் வாழ்வில் கிடைத்த பெரும்பாக்கியம். நிஜமான 'குவளை கண்ணன்' குடும்பத்தார் என்னைச் சந்தித்து, அவரைப் பார்த்தது போல இருந்தது என்று கண்ணீர் விட்டதைத்தான் எனக்கான விருதாக நினைக்கிறேன்.

    வாய்ப்பு கேட்டனர்

    வாய்ப்பு கேட்டனர்

    சினிமாவில் நான் பெரிதாக எதையும் சாதித்து விட்டதாகக் கருதவில்லை. என் உயரத்துக்கும், திறமைக்கும் என்ன முடியுமோ அதைச் செய்திருக்கிறேன். ஆரம்பத்தில், என் உருவத்தைப் பார்த்து கிண்டல் செய்த நடிகர், நடிகைகள் பின்னாளில் என்னிடமே வாய்ப்பு கேட்டு நின்றதைச் சந்தித்திருக்கிறேன். புது இயக்குனர்கள், புதுத் தயாரிப்பாளர்கள் யார் வந்து அழைத்தாலும் நடித்துக் கொடுக்கிறேன். பணம் போட முன்வந்தால், படம் இயக்கி கொடுக்கிறேன். என்னால் இழந்தவர்கள் யாரும் இல்லை. நான் இழந்தது ஏராளம். நட்புக்காக, நண்பனுக்காக, பழக்கத்துக்காக இழந்திருக்கிறேன். இதற்காக யாரையும் குற்றம் சொல்லவில்லை. சினிமா அப்படித்தான். அது எனக்குப் புரிந்திருப்பதால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எனது சினிமா பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    அனைவருக்கும் நன்றி

    அனைவருக்கும் நன்றி

    என்னைப் பெற்றவர்கள், வளர்த்த டி.பி.முத்துலட்சுமி அம்மாள், குருவாக இருந்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் சார், கற்றுக் கொடுத்த விசு சார், வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர்கள், உடன் பணியாற்றிய கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், என்னை இயக்கிய இயக்குனர்கள், எனக்கு உறுதுணையாக இருந்து வரும் குடும்பத்தினர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து வரும் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன். என டி.பி. கஜேந்திரன் எழுதிய கடிதம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    English summary
    Late Director and comedy actor TP Gajendran once wrote about his life history details trending in social media. He has worked under Legendary directors K Balachander and Visu and done many movies with Actor Prabhu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X