விஜயகாந்தின் சகோதரி உயிரிழந்தார்.. இன்று உயிர் பிரிந்தது.. நாளை இறுதிச்சடங்கு!
சென்னை: கேப்டன் விஜயகாந்த் அவர்களின் சகோதரி விஜயலட்சுமி இன்று காலமானார்.அவரின் இறுதிச்சடங்கு நாளை மாலை 3 மணி அளவில் அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. இவரது மறைவுக்கு தேமுக திமுக தொண்டர்களும், பொதுமக்குளம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜயகாந்த், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள ராமானுசபுரம் என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை பெயர் அழகர்சாமி, தாயார் பெயர் ஆண்டாள் ஆகும். சிறு வயதிலேயே இவரது தாயார் இறந்து விட குடும்பம் மதுரைக்கு வந்தனர். நடிகர் விஜயகாந்த் அவர்களுடன் பிறந்தவர்கள் ஆறு சகோதரர்கள், ஐந்து சகோதரிகள் என மொத்தம் 11 பேர். விஜயகாந்த் அவர்களின் மூத்த அண்ணன் பெயர் நாகராஜ், இவருக்கு அடுத்ததாக பிறந்தவர் தான் விஜயகாந்த். அவரைத் தொடர்ந்து, செல்வராஜ், பால் ராஜ், ராம்ராஜ், ப்ரித்விராஜ், விஜயலட்சுமி, சித்ரா, திருமலாதேவி, சாந்தி என வரிசையாக பிறந்தார்கள்.

விஜயகாந்தின் சகோதரி: இதில், செல்வராஜ் மற்றும் பால்ராஜ் இருவர் மட்டுமே மதுரையில் வசித்து வருகிறார்கள். மதுரையில் விஜயகாந்த்தின் தந்தை கட்டிய ஆண்டல்பவன் இல்லத்தில் இவர்கள் இருவரும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். மற்ற சகோதரர், சகோதரிகள் அனைவரும் சென்னை, தேனி என பல ஊர்களில் இருக்கிறார்கள். இந்நிலையில், விஜயகாந்த் அவர்களின் மூத்த சகோதரி சென்னையில் தனது குடும்பத்தோடு வசித்து வந்த நிலையில் சற்று முன் காலமானார். அவரின் இறுதிச்சடங்கு நாளை மாலை ஒரு மணி முதல் மூன்று மணி வரை, அண்ணாநகர் வடக்கு குறுக்கு தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. விஜயகாந்த் மூத்த சகோதரியின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திடீர் மறைவு: மருத்தவரான விஜயலட்சுமி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவ நிபுணராகப் பணியாற்றி வந்தார். இவரும் விஜயகாந்தைப் போலவே ஏழை எளிய நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. மருத்துவத் துறையில் அவரது சேவையைப் பாராட்டும் வகையில் பல்வேறு விருதுகளை விஜயலட்சுமி பெற்றுள்ளார். இவரது மறைவுக்கு தேமுக தொண்டர்களும், பொதுமக்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











