ஏமாற்றிய காதலன்.. தற்கொலை செய்த கணவன்.. அம்மாவின் தகாத உறவு.. துரத்திய அவமானம்..ரேகாவின் கண்ணீர் கதை
சென்னை: நடிகர் ஜெமினி கணேசன் மகளான ரேகா எப்படி பாலிவுட் சினிமாவில், தனது தடத்தை பதித்து தற்போது வரை முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் வாழ்க்கையில் சந்தித்த அவமானம், தோல்வி என்ன என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பழம்பெரும் நடிகர் காதல் இளவரசர் மறைந்த ஜெமினி கணேசன், நடிகை புஷ்பவல்லி தம்பதிகளுக்கு மகளாக பிறந்தவர் தான் ரேகா. நடிகை புஷ்பவல்லி ஆந்திராவை சேர்ந்தவர். எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி பிக்சர்ஸில் நிறைய படங்களில் நடித்துள்ளார். கதாநாயகி, கதாபாத்திரம் மட்டுமல்லாமல் எந்த வேடம் கிடைத்தாலும், அதில் நடிப்பார் அதற்கு காரணம் புஷ்பவல்லி, கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளை வளர்ப்பதற்கே மிகவும் சிரமப்பட்டு வந்தது தான்.
நடிகை ரேகா: அந்த நேரத்தில் தான் ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு வாய்ப்பு தேடி வந்தார் ராமசாமி கணேசன். இதையடுத்து, 1947 ஆம் ஆண்டு மாலினி என்கிற திரைப்படத்தில் புஷ்பவல்லியுடன் சேர்ந்து நடித்த போது தான் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், ஜெமினி கணேசன் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே அவருக்கு திருமணமாகி அலமேலு என்ற மனைவி இருந்தார். கணவனை பிரிந்த இருந்த புஷ்பவல்லிக்கு, ஜெமினி கணேசன் மீது காதல் வர, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளனர். இதன் விளைவாக ரேகா பிறந்தார்.

ஜெமினி கணேசன் விலகினார்: ஆனால், ரேகா பிறந்த அடுத்த வருடமே ஜெமினி கணேசன் புஷ்பவல்லியை விட்டு பிரிந்துவிட்டார். அந்த நேரத்தில், புஷ்பவல்லி கர்ப்பமாக இருந்தார். அதன் பிறகு ராதா என்ற மகள் பிறந்தார். ஏற்கனவே இரண்டு குழந்தைகளும் கஷ்டப்பட்டு வந்த புஷ்பவல்லிக்கு மீண்டும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்ததால், நான்கு குழந்தைகளை வைத்துக்கொண்டு படாத பட்டு அவர்களை வளர்த்து இருக்கிறார். குடும்ப வறுமை காரணமாக 1958 ஆம் ஆண்டு ரேகாவை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார். அதன் பின் ரேகா குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தார்.
ஹீரோயினாக அறிமுகமானார்: இதையடுத்து, தன்னுடைய 15வது வயதில் 'ஆபரேஷன் நல்லி' என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். புகழ்பெற்ற நடிகரான ஜெமினி கணேசன் இருந்த போதும், ரேகாவையும் அவரது குடும்பத்தையும் ஜெமினி கணேசன் ஏற்றுக்கொள்ளாததால், பட வாய்ப்பு இல்லாமல் ரேகா பலவிதமான கஷ்டங்களையும், அவமானங்களையும் சந்தித்துள்ளார். இந்த நேரத்தில் தான் ஜெமினி கணேசன் சாவித்திரியுடன் ரகசிய உறவில் இருந்த விஷயம் செய்தி தாள்களில் வெளியே கசிய ஆரம்பித்தன. அந்த நேரத்தில் ஜெமினி கணேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், என்னுடைய மனைவி அலமேலு மட்டும் தான், மனைவி அந்தஸ்தை நான் யாருக்கும் தர மாட்டேன். மற்ற அனைவருமே ரிலேஷன்ஷிப் தான் என கூறியிருந்தார். இது ரேகாவின் அம்மா புஷ்பவல்லியை வேதனையில் ஆழ்த்தியது.
தற்கொலை முயற்சி: தந்தையின் நிராகரிப்பு, சினிமாவில் பட்ட அவமானங்களால் உடைந்து போன ரேகா, ஒரு கட்டத்தில் தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். அந்த நேரத்தில் தாய் புஷ்பவல்லி, ரேகாவை அரவணைத்து காப்பாற்றினார். அதன்பின் மீண்டும் பட வாய்ப்புக்காக தேடி அலைந்த ரேகாவிற்கு, 'தோஷிகாரி' படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் நடிப்பதற்காக அவர் வாங்கிய முதல் சம்பளம் 25 ஆயிரம் ரூபாய். முதல் நாள் சூட்டிங்கில், ஹீரோ, ரேகாவை கட்டிப்பிடித்து உதட்டில் முத்தம் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் இந்த காட்சி அப்படியே படமாக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு காட்சி இருக்கும் என்று எதுவுமே தெரியாத, 15 வயதில் தனக்கு நடந்த அவமானத்தை நினைத்து தனிமையில் பல நாட்கள் அழுது இருக்கிறார் ரேகா. கடைசிக்கு அந்த முத்தக் காட்சி தான் ரேகாவை பிரபலமாக்கியது

காதல் கிசுகிசு: அதைத்தொடர்ந்து Shawan bhadon படத்தின் வெற்றியால் ஸ்டார் நடிகையாக மாறிய ரேகா, ஒரே நேரத்தில் 25 படங்களில் ஓய்வே இல்லாமல் நடித்தார். ஜிதேந்திராவுடன் ஒரு படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர, இருவரும் பல இடங்களில் ஒன்றாக வலம் வந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற செய்திகள் பரவிய நேரத்தில் தான், ஜிதேந்திராவிற்கு ஏற்கனவே விமான பணிப்பெண்ணுடன் உறவு இருந்தது தெரிய வர, ஜிதேந்திராவை பிரிந்தார்.
ரகசிய திருமணம்: அதன் பின்பு வினோத் மேத்தா உடன் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த திருமணத்தில் வினோத் மேத்தாவின் அம்மாவிற்கு விருப்பம் இல்லை. ரேகாவின் தவறான பிறப்பை காரணம் காட்டி அவரை காயப்படுத்தி உள்ளார். இருந்த போதும், வினோத் மேத்தா, அம்மாவிற்கு தெரியாமல் ரேகாவை திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு அழைத்து சென்றார். ஆனால், வினோத் மேத்தாவின் அம்மா, ரேகாவை மேலும் அவமானப்படுத்தி அந்த வீட்டை விட்டே அனுப்பி விட்டார். அதன் பிறகு, வினோத் மேத்தாவும் ரேகாவை சந்திக்கவே இல்லை. இதனால், மன வேதனையில் இருந்த ரேகா அதில் இருந்து மீண்டு வந்து, நடிப்பின் மீது கவனத்தை செலுத்தினார்.
அமிதாப்பை காதலித்தார்: அமிதாப்பச்சனும் ரேகாவும் சேர்ந்து நடித்த பல படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. இதனால், இருவரையும் இணைத்து பல பத்திரிகைகளில் செய்திகள் வெளி வர ஆரம்பித்தனர். ரேகாவும் வெளிப்படையாகவே மீடியாக்களில் அமிதாபச்சன் மீதான காதல் குறித்து பேசினார். இந்த விஷயம் ஜெயா பச்சன் காதில் விழ, ரேகாவும் அமிதாபச்சனும் இனி சேர்ந்து நடிக்க கூடாது என கணவரிடம் முட்டுக்கட்டை போட்டார். ஆனால், அமிதாப்பச்சனை மறக்க முடியாமல் தவித்த ரேகா, வடுகில் குங்குமத்தை வைத்து அவர் நினைவாகவே வாழ்ந்து வந்தார்.

ஆசைப்பட்ட திருமண வாழ்க்கை: தனக்கு ஒரு நல்ல வாழ்க்கை, கணவன், குழந்தை வேண்டுமென ஆசைப்பட்ட ரேகா, தொழிலதிபர் முகேஷ் அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். சந்தோஷமாக வாழ்க்கையை தொடங்கிய ரேகாவிற்கு அந்த சந்தோஷம் கொஞ்சம் நாள் கூட நீடிக்காமல் போகிறது. சில காரணங்களால் முகேஷ் அகர்வால் தற்கொலை செய்து கொள்ள அதற்கு காரணம் ரேகா தான் என பல பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தன. இதே நேரத்தில், அம்மாவும் இறந்துவிட வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளே முடங்கிப்போன ரேகா, அதில் இருந்து மீண்டு மீண்டும் படத்தில் நடிக்க தொடங்கினார்.
சாதித்த ரேகா: 1994 ஆம் ஆண்டு நடத்த பிலிம் ஃபேர் விழாவில் நடிகை ரேகா, ஜெமினி கணேசனுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருதை கொடுத்தார். அப்போது தான், முதல் முறையாக ஜெமினி கணேசன் என் செல்ல மகள் ரேகா என்று மேடையில் சொன்னார். ரேகா இத்தனை ஆண்டுகள் அனுபவித்து வந்த அவமானத்தையும், வேதனையும் அந்த ஒரு வார்த்தையால் போன மகிழ்ச்சியில் தற்போது வரை வாழ்க்கையை நகர்த்தி வருகிறார் ரேகா.


Click it and Unblock the Notifications











