என்ன சொல்றீங்க...தல 61 ஷுட்டிங் ஆரம்பிக்க போகுதா...எப்போ?
சென்னை : போனி கபூர், டைரக்டர் வினோத், அஜித் கூட்டணியில் உருவாகி வரும் இரண்டாவது படமான வலிமை படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனாலும் இதுவரை படத்தை முடிக்க முடியாமல் அடுத்தடுத்து பல தடைகளை சந்தித்து வருகிறது படக்குழு.
இதனால் எப்படியும் படத்தை சீக்கிரத்தில் எடுத்து முடிக்க தீவிரம் காட்டி வருகிறது படக்குழு. கொரோனா பரவல் தொடர்ந்து கொண்டே செல்வதால், இனியும் காத்திருக்க வேண்டாம் என படக்குழு முடிவு செய்து இறுதிக்கட்ட வேலைகளில் மும்முரமாக இறங்கி உள்ளது.

லெகேஷனை மாற்றி படக்குழு
ஸ்பெயினில் நடத்த வேண்டிய இறுதிக்கட்ட ஷுட்டிங்கிற்காக தான் படக்குழு இத்தனை நாள் காத்திருந்தது. ஆனால் இனியும் காலம் கடந்த வேண்டாம் என நினைத்து லொகேஷனை ரஷ்யாவிற்கு மாற்றி விட்டார்கள். அங்கு தான் அஜித் நடிக்கும் க்ளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாம்.

ரஷ்யா சென்ற படக்குழு
இதற்காக ஏற்கனவே அஜித் உள்ளிட்ட வலிமை படக்குழு ரஷ்யா சென்று விட்டதாம். அங்கு ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் ஷுட்டிங்கை நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளனர். அதன் பிறகு போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை துவக்கி, பண்டிகை நாளில் தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ரஷ்யாவில் பைக் சேஷிங் சீன்
தற்போது ரஷ்யாவில் நடக்க உள்ள இறுதிக்கட்ட ஷுட்டிங் ஆகஸ்ட் 20 ம் தேதி துவங்குகிறதாம். அங்கு அஜித் நடிக்கும் க்ளைமாக்ஸ் பைக் சேஷிங் சீன்கள் படமாக்கப்பட உள்ளதாம். அங்கு நடக்க உள்ள படப்பிடிப்போடு படக்த்தின் மொத்த ஷுட்டிங்கும் முடிய உள்ளது.

தல 61 அப்பேட்டும் வந்தாச்சு
லேட்டஸ்ட் தகவலாக அஜித் நடிக்கும் அடுத்த படமான தல 61 படத்தையும் வினோத் தான் இயக்க போகிறார் என்பது உறுதியாகி விட்டதாம். ஆக்ஷன் படமாக உருவாக உள்ள இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறாராம். இந்த படத்தின் ஷுட்டிங் வரும் அக்டோபர் மாதம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஷுட்டிங் எங்கே
அக்டோபர் மாதத்திற்கு முன்பு வலிமை படத்தின் மொத்த வேலைகளையும் முடித்து விட்டு, தல 61 வேலைகளை துவக்க உள்ளனராம். தல 61 படத்தின் ஷுட்டிங் ஐதராபாத், புதுச்சேரி போன்ற பகுதிகளில் படமாக்கப்பட உள்ளதாம். வலிமை படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், தல 61 படத்தின் அறிவிப்பு அவர்களுக்கு வீக் என்ட் டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











