சூர்யா – சிறுத்தை சிவா படம் எப்போது...லேட்டஸ்ட் அப்டேட் இதோ

சென்னை : விஸ்வாசம் படத்திற்கு பிறகு, தனது அடுத்த படத்தை சூர்யாவை வைத்து இயக்க போவதாக டைரக்டர் சிறுத்தை சிவா அறிவித்தார். ஸ்டூடியோ க்ரீன் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக 2019 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.

Latest updates on Suriya-Siruthai Siva project

பெயரிடப்படாத இந்த படம், சூரரை போற்று படத்தை சூர்யா முடித்த பிறகு துவங்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் அதற்குள் சிவா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து அண்ணாத்த படத்தை இயக்க துவங்கி விட்டார். இந்த படத்தின் அறிவிப்பு 2019 ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. இதுவரை வெளியான தகவலின்படி, ரஜினியின் இந்த பிரம்மாண்ட படத்தின் பெரும்பாலான பகுதிகள் படமாக்கப்பட்டு விட்டது. விரைவில் இந்த படத்தின் வேலைகள் முழுவதுமாக முடிக்கப்பட உள்ளன. தான் நடிக்க வேண்டிய பகுதிகளையும், டப்பிங் வேலைகளையும் ஏற்கனவே முடித்து விட்டார் ரஜினி.

லேட்டஸ்ட் தகவலாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சிவா - சூர்யா இணையும் படத்தின் படப்பிடிப்பு எந்த நேரத்திலும் விரைவில் துவங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துடன் இணைந்து சோனிலைவ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.

தற்போது சூர்யா, டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படத்தில் பிஸியாக இருந்து வருகிறார். அதைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X