»   »  ரூ 300 கோடி பட்ஜெட், 27 உதவி இயக்குநர்கள், 10 தயாரிப்பு மேலாளர்கள்... பிரமாண்ட ரஜினி படம்!

ரூ 300 கோடி பட்ஜெட், 27 உதவி இயக்குநர்கள், 10 தயாரிப்பு மேலாளர்கள்... பிரமாண்ட ரஜினி படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி - ஷங்கர் இணையும் அடுத்த படம் பற்றி வருகிற தகவல்கள் படிப்பவர்களை பிரமிக்க வைப்பதாய் இருக்கிறது.

இதுவரை வந்த இந்தியப் படங்களில் அதிக பட்ஜெட் கொண்ட படம், அதிக டெக்னீஷியன்கள் பணியாற்றும் படம், அதிக உதவி இயக்குநர்கள் பணியாற்றும் படம், அதிக நாடுகளில் படமாக்கப்பட்ட படம் என ஏகப்பட்ட 'முதன்மை'யை உள்ளடக்கிய படமாக எந்திரன் 2 உருவாகிறது.

ரூ 300 கோடி பட்ஜெட்

ரூ 300 கோடி பட்ஜெட்

இந்தியப் படங்களில் அதிக பட்ஜெட் கொண்ட படமாக இப்போது வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற பாகுபலி திகழ்கிறது. அதிக வசூல் குவித்த படமும் அதுதான். இந்தப் படத்தின் பட்ஜெட்டையும் மிஞ்சும் வகையில் ரூ 300 கோடி செலவில் எந்திரன் 2 உருவாகவிருக்கிறது.

27 உதவி இயக்குநர்கள்

27 உதவி இயக்குநர்கள்

இந்தப் படத்தில் இயக்குநர் ஷங்கருக்கு உதவியாளர்களாக 27 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களுடன் முதல் கட்ட விவாதம் தொடங்கி இருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

10 தயாரிப்பு மேலாளர்கள்

10 தயாரிப்பு மேலாளர்கள்

அதே போல, தயாரிப்பைக் கவனிக்க 10 மேலாளர்களை நியமித்துள்ளார்களாம். முழுவதும் ஹாலிவுட் பாணியில் தயாரிப்பு நிர்வாகத்தை மாற்றியிருக்கிறாராம் இயக்குநர் ஷங்கர்.

ஆக்ஷன் டிசைனிங்

ஆக்ஷன் டிசைனிங்

எந்திரன் படத்தில் இறுதிக் காட்சியில் வரும் பிரமாண்ட ஆக்ஷன் காட்சிகளை ஷங்கரே டிசைன் செய்திருப்பார். அதே போல இந்தப் படம் முழுக்க வரும் ஆக்ஷன் காட்சிகளையும் ஷங்கர்தான் உருவாக்கப் போகிறாராம். பயிற்சிக்கு மட்டும் பீட்டர் ஹெயின் மற்றும் ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநரை வைத்துக் கொள்ளப் போகிறாராம்.

முதல் கட்டப் படப்பிடிப்பு

முதல் கட்டப் படப்பிடிப்பு

முதல் கட்டப் படப்பிடிப்பை சென்னையின் சுற்றுப்புறங்களில் இதுவரை பார்த்திராத இடங்களில் படமாக்க, லொகேஷன் தேர்வு செய்து வருகின்றனர். மீதியை வெளிநாடுகளில் படமாக்கப் போகிறார்களாம்.

English summary
According to sources, there 27 assistant directors selected for Rajinikanth's Shankar directed next mega budget movie.
Please Wait while comments are loading...