»   »  காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் லதா ரஜினிகாந்த் யாகம்!

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் லதா ரஜினிகாந்த் யாகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் இன்று தொடங்கி பத்து நாட்கள் நடக்கும் சிறப்பு யாகத்தில் ரஜினிகாந்த் மனைவி லதா கலந்து கொண்டார்.

காவிரி, ஸ்டெர்லைட் பிரச்சினைகளுக்காக நடக்கும் போராட்டங்களால் தமிழகமே போர்க்களமாக மாறியுள்ளது.

Latha Rajinikanth at Kanchi Kamatchi Amman Temple

கடந்த இரண்டு ஆண்டுகளாக எப்போதும் இல்லாத அளவில் தமிழகத்தில் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன. தமிழகத்தில் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து நன்மை நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து பத்து நாள் யாகம் ஒன்றை காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் இன்று தொடங்கியுள்ளனர்.

இந்த யாகத்தின் முதல் நாளில் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் பங்கேற்றார்.

Latha Rajinikanth at Kanchi Kamatchi Amman Temple

"தமிழகத்தில் அனைத்துப் பிரச்சினைகளும் நீங்கி மக்கள் நிம்மதியான சூழலில் வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையில் நானும் பங்கெடுத்துக் கொண்டேன். அனைத்துப் பிரச்சினைகளும் விரைவில் தீரும்," என்றார்.

English summary
Latha Rajinikanth was attended a special Yagham at Kanchi Kamatchi Amman Temple for bringing peace in Tamil Nadu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X