லலிதா குமாரியின் அண்ணன் மகள் வீடு திரும்பினார்!
சென்னை : நடிகை டிஸ்கோ சாந்தி மற்றும் நடிகை லலிதா குமாரியின் சகோதரர் மகள் காணாமல் போனதாகp புகார் அளிக்கப்பட்டது.
லலிதா குமாரியின் அண்ணனும், சினிமா உதவி இயக்குனருமானஅருண் மொழி வர்மனின் மூத்த மகள் அப்ரீனா +2 படிக்கிறார்.
கடந்த 6-ம் தேதி பள்ளிக்குச் சென்ற அப்ரீனா திரும்ப வரவில்லை. அவர் இப்போது வீடு திரும்பியுள்ளார்.

போலீசில் புகார் :
பாண்டிபஜார் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்ததன் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். ஆனாலும் அப்ரீனாவை கண்டுபிடிக்க முடியாத சூழல் நிலவியது.

பள்ளியிலும் விசாரணை :
அப்ரீனா படித்த சர்ச் பார்க் பள்ளியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமராக்கள் சில செயல்படாமல் இருந்ததால் அவற்றின் மூலமும் அவர் காணாமல் போனதைப் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறாமல் போலீசார் திணறினர்.
லலிதா குமாரி :
பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவி லலிதா குமாரி, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்து ஊடகங்களின் உதவியை நாடினார். 'ஊடகங்கள் மூலம் என் அண்ணன் மகள் அப்ரினா கிடைப்பால் என்ற நம்பிக்கை இருக்கிறது' எனத் தெரிவித்திருந்தார்.
காணாமல் போனவர் கிடைத்தார் :
காணாமல் போன அப்ரீனா கிடைத்துவிட்டார். இது தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ், 'எங்கள் குழந்தை திரும்ப வந்துவிட்டாள். உதவிய அனைவருக்கும் நன்றி' என ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார். காணவில்லை எனப் பதிவாகியிருந்த ட்வீட் நீக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











