»   »  கபாலிக்காக ரஜினி படத்துடன் வெள்ளி நாணயங்கள்!

கபாலிக்காக ரஜினி படத்துடன் வெள்ளி நாணயங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபாலி படம் வெளியாவதையொட்டி, ரஜினி உருவத்துடன் கூடிய வெள்ளி நாணயங்களை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தியுள்ளது முத்தூட் நிறுவனம்.

ரஜினி என்ற பிராண்ட் இன்று உலகெங்கும் பரபரப்பாக பேசப்படுகிறது. அதுவும் கபாலி படம் இதுவரை ரஜினியின் எந்தப் படத்துக்கும் இல்லாத எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Laucky Superstar Silver coins fro Kabali

மோட்டார் சைக்கிளில் தொடங்கி விமானம் வரை கபாலி ரஜினி மயம்தான். இப்போது இன்னும் ஒரு படி மேலே போய், ரஜினி உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயங்களை வெளியிட்டுள்ளது முத்தூட் பின்கார்ப் நிறுவனம்.


Laucky Superstar Silver coins fro Kabali

இன்று மாலை சென்னை ஹயாத் ஹோட்டலில் நடந்த நாணய வெளியீட்டு விழாவில், கபாலி படத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கலந்து கொண்டு, நாணயங்களை வெளியிட்டார்.


படத்தின் இயக்குநர் ரஞ்சித், நடிகர் கலையரசன், முத்தூட் நிறுவன இயக்குநர் தாமஸ் ஜான் முத்தூர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Laucky Superstar Silver coins fro Kabali

லக்கி சூப்பர் ஸ்டார் சில்வர் காய்ன்ஸ் என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த நாணயங்கள் 5 கிராம் ரூ 300-க்கும், 10 கிராம் ரூ 750-க்கும், 20 கிராம் ரூ 1400-க்கும் விற்கப்படுகின்றன.


Laucky Superstar Silver coins fro Kabali

10 கிராமில் ரஜினி படம் பொறித்த வெளிப்பதக்கமும் விற்பனைக்கு வந்துள்ளது. அதன் விலை ரூ 750.

English summary
Muthoot Fincorp has released Kabali Rajini Silver coins Today to celebrate Kabali release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil