அவ்வளவு தருவதாகச் சொல்லியும்.. 'சரக்கு' விளம்பரத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை.. கொள்கை முடிவாம்!

By

சென்னை: அதிக சம்பளம் தருவதாகக் கூறியும் மதுபான விளம்பரங்களில் நடிக்க பிரபல நடிகை மறுத்துள்ளார்.

தமிழில், சாக்ரடீஸ் இயக்கத்தில் சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் லாவண்யா திரிபாதி.

தொடர்ந்து சி.வி.குமார் இயக்கத்தில் வெளியான மாயவன் படத்தில் நடித்திருந்தார்.

ஏ 1 எக்ஸ்பிரஸ்

ஏ 1 எக்ஸ்பிரஸ்

தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்துள்ள லாவண்யா, சந்தீஷ் கிஷன் ஜோடியாக, ஏ 1 எக்ஸ்பிரஸ் உட்பட சில படங்களில் இப்போது நடித்திருக்கிறார். கொரோனா காரணமாக தடைபட்டுள்ள இந்த படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. விரைவில் ரிலீஸ் ஆக இருக்கின்றன.

விளம்பர படங்கள்

விளம்பர படங்கள்

தெலுங்கில், ராஜமவுலி தயாரித்த அண்டால ராக்‌ஷசி என்ற படம் மூலம் அங்கு ஹீரோயினாக அறிமுகமானவர், லாவண்யா. இதில் நவீன் சந்திரா, ராகுல் ரவீந்திரன் ஹீரோக்களாக நடித்தனர். இந்த படத்துக்கு முன், இந்தியில் டிவி சீரியல்களிலும் விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

மதுபான விளம்பரம்

மதுபான விளம்பரம்

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் லாவண்யாவும் ஒருவர். சில நடிகைகள், மதுபான விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். அது தொடர்பான வீடியோக்களையும் புகைப்படங்களையும் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறனர்.

லாவண்யா மறுப்பு

லாவண்யா மறுப்பு

சமீபத்தில், நடிகை பாயல் ராஜ்புத் கூட மதுபான விளம்பர படத்தில் நடித்திருந்தார். அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், மதுபான விளம்பரங்களில் நடிக்க வைக்க நடிகை லாவண்யா திரிபாதியையும் சில நிறுவனங்கள் அணுகியுள்ளன. ஆனால், அவர் அதை மறுத்துவிட்டாராம்.

கொள்கை முடிவு

கொள்கை முடிவு

இதற்காக அவருக்கு அதிகமான சம்பளம் தருவதாகக் கூறப்பட்டும் அதை மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுபானம் போன்ற போதை பொருள் தொடர்பான விளம்பரங்களில் நடிப்பதில்லை என்று நடிகை லாவண்யா கொள்கை முடிவு எடுத்திருக்கிறார், என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X