'காஞ்சனா'வுக்குப் பிறகு.. அந்த படத்துக்காக ராகவா லாரன்ஸுடன் மீண்டும் இணைந்த நடிகர் சரத்குமார்!
சென்னை: 'காஞ்சனா' படத்துக்குப் பிறகு நடிகர் சரத்குமார், ராகவா லாரன்ஸுடன் இணைந்து நடிக்கிறார்.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு 'காஞ்சனா 3' படம் வெளியானது.
அதன் பிறகு அவர் நடிப்பில் ருத்ரன், சந்திரமுகி 2 ஆகிய படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியானது.

காஞ்சனா இந்தி ரீமேக்
இதற்கிடையே அவர் இயக்கி, தயாரித்து நடித்த காஞ்சனா படத்தை இந்தியில் ரீமேக் செய்தார். லக்ஷ்மி பாம் என்ற பெயரில் உருவான இந்தப் படத்தில் அக்ஷய் குமார், கியாரா அத்வானி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்திக்காக கதையில் சில மாற்றங்கள் செய்து இயக்கினார். கடந்த சில மாதங்களுக்கு முன் ஓடிடியில் வெளியான இந்தப் படம் வரவேற்பை பெற்றது. இதற்கிடையே அவர் இயக்கி, தயாரித்து நடித்த காஞ்சனா படத்தை இந்தியில் ரீமேக் செய்தார். லக்ஷ்மி பாம் என்ற பெயரில் உருவான இந்தப் படத்தில் அக்ஷய் குமார், கியாரா அத்வானி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்திக்காக கதையில் சில மாற்றங்கள் செய்து இயக்கினார். கடந்த சில மாதங்களுக்கு முன் ஓடிடியில் வெளியான இந்தப் படம் வரவேற்பை பெற்றது.

இயக்குனராக அறிமுகம்
இந்நிலையில், அவர் அடுத்து ருத்ரன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் டைட்டிலை கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி வெளியிட்டனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இதற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து, இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

அய்யப்பனும் கோஷியும்
இவர், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகிர்தண்டா உட்பட சில படங்களைத் தயாரித்தவர். சில படங்களில் நடித்தும் இருக்கிறார். இப்போது மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அய்யப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை அவர் பெற்றுள்ளார்.

பிரியா பவானி சங்கர்
ருத்ரன் படத்தில் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் சரத்குமார் இணைந்துள்ளார். லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா படத்தில் சரத்குமார், திருநங்கையாக நடித்திருந்தார்.

முக்கியமான கேரக்டர்
அந்தப் படம் வெளியாகி 10 வருடம் ஆகிவிட்டன. இந்நிலையில் இப்போது இருவரும் ருத்ரன் படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். இதில் முக்கியமான கேரக்டரில் சரத்குமார் நடிக்க இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. சரத்குமார் இப்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











