»   »  லாரன்ஸ் உதவிய 128வது இதய அறுவை சிகிச்சை!

லாரன்ஸ் உதவிய 128வது இதய அறுவை சிகிச்சை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆதரவற்றோருக்கும் ஏழைக் குழந்தைகளுக்கும் நிறைய உதவிகள் செய்து வரும் நடிகர் ராகவா லாரன்ஸ், அண்மையில் ஒரு குழந்தையின் இதய அறுவைச் சிகிச்சைக்கு உதவினார்.

இது அவர் உதவிய 128வது அறுவைச் சிகிச்சை ஆகும்.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து அந்த குழந்தையின் முகத்தில் வந்த புன்சிரிப்பினைக் கண்ட அவரது தாய் ஆனந்தக் கண்ணீருடன் லாரன்சுக்கு நன்றி கூறியுள்ளார்.

Lawrence helps for a child's heart surgery

இந்தச் செய்தியை தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் குறிப்பிட்டதோடு தாயின் கையில் இருக்கும் அந்தக்குழந்தையின் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார் லாரன்ஸ்.

ஏற்கெனவே 300 குழந்தைகளுக்கு பல்வேறு அறுவைச் சிகிச்சைகளுக்காக உதவி வழங்கியுள்ளார் லாரன்ஸ். அவற்றில் 128 இதய அறுவைச் சிகிச்சைகள் ஆகும்.

Posted by Indian Jakson - Raghava Lawrence on Monday, March 14, 2016

இவை தவிர கல்வி உதவிகளையும் கணிசமாக வழங்கி வருகிறார். அண்மையில் ரூ 1 கோடியை உதவியாக அறிவித்து கலாம் பெயரில் ஒரு அமைப்பு தொடங்கி உதவிகள் செய்து வருகிறார் லாரன்ஸ்.

English summary
Actor - Director Raghava Lawrence has helped for a child's heart operation.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil