»   »  இதுவும் பேய்தான்... ஆனால் இது வேற மாதிரி...!

இதுவும் பேய்தான்... ஆனால் இது வேற மாதிரி...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பேய்ப் படங்களை விடுவதாக இல்லை நம்மவர்கள். தொடர்ந்து பேய்களுடன் உலா வந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் உருவாகி வரும் ஒரு புத்தம் புதுப் பேய் படம்தான் சவுகார்பேட்டை.

தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் தயாராகும் ஸ்ரீகாந்த் - ராய் லட்சுமி நடிக்கும் படம்தான் சவுகார்பேட்டை.

மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பாக ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் சவுகார்பேட்டை.

பிரமாண்டமாக...

பிரமாண்டமாக...

ஸ்ரீகாந்த் - ராய்லட்சுமி இருவரும் இணைந்து நடிக்கும் இந்த படம் மூன்று மொழிகளில் மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஊருக்கு ஒரு பேய்

ஊருக்கு ஒரு பேய்

தமிழில் சவுகார்பேட்டை, தெலுங்கில் பேகம் பேட்டா, ஹிந்தியில் தந்திர சக்தி என்ற பெயரில் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்களாம்.

கஞ்சா கருப்பும்.. கோட்டா சீனிவாசராவும்

கஞ்சா கருப்பும்.. கோட்டா சீனிவாசராவும்

இப்படத்தில் சுமன். கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி, சரவணன்,மனோபாலா, விவேக், அப்புகுட்டி, கோட்டாசீனிவாசராவ், தலைவாசல் விஜய், சம்பத், கோவைசரளா, பவர்ஸ்டார் சீனிவாசன், சிங்கம் புலி, நான் கடவுள் ராஜேந்திரன், டி.பி.கஜேந்திரன், ரேகா, ஆர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இசைக்கு ஜான் பீட்டர்

இசைக்கு ஜான் பீட்டர்

இசை- ஜான்பீட்டர், ஒளிப்பதிவு சீனிவாச ரெட்டி, பாடல்கள் நா.முத்துக்குமார், விவேகா. தயாரிப்பு - ஜான்மேக்ஸ் - ஜோன்ஸ்

வடிவுடையான் சொல்வது என்ன

வடிவுடையான் சொல்வது என்ன

கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் வடிவுடையான். இப் படத்தை பற்றி இயக்குனர் வடிவுடையானிடம் கேட்டோம்... இதுவரை பார்த்த ஸ்ரீகாந்த் - ராய் லட்சுமி இருவரையும் இப்படம் வேறுபடுத்தி காட்டும் படமாக இருக்கும்..

பேய்தான்.. ஆனால் வேற மாதிரி

பேய்தான்.. ஆனால் வேற மாதிரி

பேய் கதைதான் ஆனால் வேறு மாதிரியான உணர்வை இது தரும் என்றார் வடிவுடையான். செப்டம்பர் மாதம் மூன்று மொழிகளிலும் வெளிவர உள்ளது சவுகார்பேட்டை.

பயப்படத் தயாராவோம்

English summary
Sowkarpettai is an upcoming Tamil horror film directed by Vadivudaiyan, starring Srikanth and Raai Laxmi in the leading roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil