»   »  பேயா.. ராயா.. பாத்துருவோம் ஒரு கை... இது சவுகார்ப்பேட்டை கலாட்டா!

பேயா.. ராயா.. பாத்துருவோம் ஒரு கை... இது சவுகார்ப்பேட்டை கலாட்டா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ரீகாந்த் ஜோடியாக ராய் லட்சுமி நடிக்கும் புதிய படம் சவுகார்பேட்டை.

‘ஓம் சாந்தி ஓம்' ,'எதிரி எண் 3' படங்களில் பிசியாக நடித்து வரும் ஸ்ரீகாந்த்தின் அடுத்தப்படமான ‘சவுகார்பேட்டை' படத்தை வடிவுடையான் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே, கரண் நடிப்பில் வெளிவந்த ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்' என்ற படத்தை இயக்கியவர்.


இப்படத்தை மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை இயக்கிய ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் தயாரிக்கிறது.


அரண்மனை படத்திற்கு பிறகு ராய் லட்சுமி நடிக்கும் பேய் படம் இது. எனவே நிச்சயம் இப்படமும் வெற்றிப்படமாக அமையும் என அவர் நம்புகிறாராம். அரண்மனைக்கு முன்னதாக ராய் லட்சுமி நடித்த காஞ்சனா திரைப்படமும் வெற்றி பெற்றது.


பேயை நம்பலாம்...

பேயை நம்பலாம்...

எனவே, முந்தைய இரண்டு பேய்ப் படங்களைப் போலவே இப்படமும் தனக்கு நல்ல பெயர் வாங்கித் தரும் என ராய்லட்சுமி நம்புகிறாராம். அதுபோகவே, லட்சுமி ராய் என்ற தன் பெயரை ராய் லட்சுமி என மாற்றிய பின்னர் வெற்றிப் படங்கள் அமைவதால் அவர் மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.


சவுகார்பேட்டை....

சவுகார்பேட்டை....

சென்னையில் உள்ள சவுகார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படம் படமாக்கப் படுகிறது. படத்தின் போஸ்டர்களைப் பார்த்தாலே இது நிச்சயம் பேய் படமாகத் தான் இருக்க வேண்டும் என சொல்லாமலேயே புரிகிறது.


ராய் லட்சுமிக்கு போட்டியாய்...

ராய் லட்சுமிக்கு போட்டியாய்...

ராய் லட்சுமிக்கு போட்டியாக ஒரு ரூபாய் அளவு குங்குமப் பொட்டோடு, தலை விரி கோலமாய் திகில் கிளப்புகிறார் ஸ்ரீகாந்த். ஒரு புகைப்படத்தில் ராய் லட்சுமி முகத்தில் ரத்தம் வழிகிறது. சோ, நிச்சயமாக இது பழிவாங்கும் காதல் பேய்க்கதையாகத் இருக்க வேண்டும்.


காமெடி விருந்து....

காமெடி விருந்து....

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தில் மனோபாலா, சரவணன், விவேக், அப்புகுட்டி, கோட்டா சீனிவாசராவ், சம்பத், கோவை சரளா, சுமன், பவர்ஸ்டார் சீனிவாசன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். எனவே, நிச்சயமாக காமெடி விருந்தும் காத்திருக்கிறது.


சவுகார்ப்பேட்டை காஞ்சனா

சவுகார்ப்பேட்டை காஞ்சனா

ஆக மொத்தத்தில் காதல், ஆக்‌ஷன், செண்டிமெண்ட், திகில், ஹாரர், காமெடி என எல்லாம் கலந்த கமர்ஷியல் படமாக சவுகார்பேட்டை இருக்கும் என நம்பலாம்.


English summary
Srikanth and Laxmi Raai will share the screen space in a film titled ‘Sowkarpettai’. It is said to be an eerie thriller loaded with comedy elements.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil