மணிரத்னம் போலவே மல்ட்டி ஸ்டாரர் படம் எடுக்கும் கௌதம் மேனன்... விடிவி 2-வில் முன்னணி நடிகர்கள்!

By Vignesh Selvaraj

சென்னை : சிம்பு, திரிஷா நடிப்பில் கௌதம் மேனனின் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'.

இப்படத்தின் கார்த்திக் - ஜெஸ்ஸி காதல் பல காதலர்களின் ஃபேவரிட். இன்றைக்கும் ரசிக்கும் வகையில் எவர்கிரீன் படமான 'விடிவி'யின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.

இந்தப் படத்தில் கார்த்திக்காக மாதவன் நடிக்க, அவரது நண்பர்களாக மலையாள நடிகர் டொவினோ தாமஸ், கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் ஆகியோர் நடிக்க இருக்கிறார்களாம்.

விண்ணைத்தாண்டி வருவாயா

விண்ணைத்தாண்டி வருவாயா

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரசிகர்களை ஈர்த்தது. காதலர்கள் மத்தியில் மிகவும் கொண்டாடப்பட்ட இப்படத்தின் பாடல்களுக்கும் செம வரவேற்பு இருக்கிறது.

இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகம்

இந்நிலையில், 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் உருவாக இருக்கிறது. இப்படத்தில் கார்த்தி மறுபடியும் ஜெஸ்ஸியை 7 ஆண்டுகள் கழித்து சந்திப்பது தான் கதைக்களமாக இருக்குமாம். கார்த்திக் கேரக்டரில் நடிகர் மாதவன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

டொவினோ தாமஸ்

டொவினோ தாமஸ்

'விடிவி' படத்தில் சிம்பு நடித்த கேரக்டரில் 'விடிவி 2'-வில் மாதவன் நடிக்க, அவரது கன்னட நண்பராக புனீத் ராஜ்குமாரும், மலையாளி நண்பராக டொவினோ தாமஸும் நடிக்க இருக்கிறார்களாம். ஆக, இந்தப் படம் மல்டி ஸ்டாரர் படமாக உருவாகிறது.

மலையாள நடிகர்

மலையாள நடிகர்

டொவினோ தாமஸ் சமீபத்தில் கௌதம் மேனன் வெளியிட்ட 'உலவிரவு' வீடியோ ஆல்பத்தில் டிடி-யுடன் நடித்திருந்தார். அந்த ஆல்பத்தை தொடர்ந்து தனது படத்திலும் டொவினோ தாமஸுக்கு முக்கிய கேரக்டரை கொடுத்துள்ளார் கௌதம் மேனன். டொவினோ தாமஸ் தனுஷின் 'மாரி 2' படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X