»   »  வரலட்சுமிக்காக ஒன்றிணையும் முன்னணி நடிகர்கள்!

வரலட்சுமிக்காக ஒன்றிணையும் முன்னணி நடிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமியின் நடிப்பு 'தாரை தப்பட்டை', 'விக்ரம் வேதா' ஆகிய சில படங்களில் ரசிகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. தற்போது தமிழைத் தாண்டி மலையாளம் மற்றும் கன்னட சினிமாவிலும் நிறைய படங்கள் நடித்து வருகிறார் வரலட்சுமி.

தமிழில், கடைசியாக இவரது நடிப்பில் 'நிபுணன்' படம் வெளியாகி இருந்தது. அடுத்து இவர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிரியதர்ஷினி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார்.

Leading actors together for varalaxmi

கதாநாயகியை மையமாகக் கொண்டு மர்மம் கலந்த த்ரில்லர் படமாக உருவாகிறது இந்தப் படம். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அக்டோபர் 5-ம் தேதி நடிகர்கள் சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான், ராணா டகுபதி, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து வெளியிட உள்ளார்களாம்.

மூன்று மொழியில் தயாராகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அந்தந்த மொழியில் பிரபலமாக உள்ள சினிமா நட்சத்திரங்கள் வெளியிட்டால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என படக்குழு அளித்த யோசனையின்படி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

English summary
Varalaxmi is doing a lot of films in Tamil and Kannada cinema beyond Tamil. Priyadarshini has directed trilingual film lead by varalaxmi. The first look of the film will be released on October 5 by leading actors.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil