»   »  நா.முத்துகுமார் இடத்தை நிரப்ப முடியாமல் தவிக்கும் இயக்குநர்கள்!

நா.முத்துகுமார் இடத்தை நிரப்ப முடியாமல் தவிக்கும் இயக்குநர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காலத்தால் அழியாத பாடல்களை நமக்கெல்லாம் தந்து விட்டு தனது நாற்பதுகளிலேயே சென்றுவிட்டார் கவிஞர் நா.முத்துகுமார். அவரது இடத்தை இன்னொருவர் வந்து நிரப்புவது சிரமம்.

அவருடன் நெருங்கி பழகி பணியாற்றிய இயக்குநர்கள்தான் முத்துகுமார் இல்லாமல் தவிக்கிறார்கள். முக்கியமாக இயக்குநர் விஜய்யின் எல்லா படங்களுக்கும் பாடல்கள் எழுதியவர் நா.முத்துகுமார்தான். பாடல்கள் மட்டுமல்லாது கதை விவாதத்திலும் விஜய்யோடு இணைந்திருப்பார் முத்துகுமார்.

Leading directors missed Na Muthukkumar a lot

விஜய் அடுத்து ஜெயம் ரவியை ஹீரோவாக வைத்து படம் இயக்கி வருகிறார். இதில் முழுக்க முழுக்க புது டீம் அமைத்திருக்கிறார். தனது ஆஸ்தான இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷுக்கு பதில் ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவுக்கு பதிலாக திரு என மாற்றி விட்டாலும் பாடலாசிரியர் கிடைக்காமல் தவிக்கிறாராம்.

இதே நிலை தான் செல்வராகவன், ராம் ஆகியோருக்கும்... மிஸ் யூ கவிஞரே...!

English summary
Most of the young directors are worrying for the loss of Poet Na Muthukkumar and couldn't replace some one for his place.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil