twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோலிவுட்: டாப் இயக்குநர்களின் சம்பளம் - முதலிடத்தில் ஷங்கர்!

    By Shankar
    |

    முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் ஹீரோக்களுக்குத்தான்... அடுத்து ஹீரோயின்களுக்கு... அப்புறம்தான் இயக்குநர்களுக்கு என்ற நிலை இருந்தது.

    இன்று அது அப்படியே உல்டா. ரஜினி படங்களைத் தவிர, மற்ற நடிகர்களின் படங்களில் பெரும்பாலும் அதிக சம்பளம் வாங்குவது இயக்குநர்கள்தான்.

    இன்றைய தேதிக்கு கோடம்பாக்கத்தில் அதிகபட்சமாக சம்பளம் வாங்கும் முன்னணி இயக்குநர்கள் சிலரது விவரங்களை இங்கே பார்க்கலாம்.

    இயக்குநர் ஷங்கர்

    இயக்குநர் ஷங்கர்

    இவர்தான் இயக்குநர்களில் டாப். இன்று நேற்றல்ல.. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக இந்த இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்திய சினிமாவின் அதிக வசூல் குவித்த ரஜினியின் எந்திரன் இவரது பெரும் சாதனை. இவரது படங்களின் பட்ஜெட்டைப் போலவே, சம்பளமும் பிரமாண்டம்தான். இன்று ஒரு படத்துக்கு இவர் வாங்குவது ரூ 15 முதல் 18 கோடி!

    ஏ ஆர் முருகதாஸ்

    ஏ ஆர் முருகதாஸ்

    தீனாவில் சின்ன இயக்குநராக அறிமுகமானார். ரமணா மற்றும் கஜினியில் வாமன அவதாரம் போல பிரமிக்க வைத்தார். துப்பாக்கி மூலம் பாக்ஸ் ஆபீஸில் தன் பெயரைத் தக்கவைத்துக் கொண்டார். இப்போது அதே துப்பாக்கியை இந்திப்படுத்திக் கொண்டிருக்கிறார். சம்பளம் ரூ 12 கோடி!

    கேவி ஆனந்த்

    கேவி ஆனந்த்

    கனா கண்டேன் என்ற படத்தில் இயக்குநராக அறிமுகமானார். அயனும் கோவும் இவரை கோலிவுட்டில் ஷங்கருக்கு இணையாக பேச வைத்தன. மாற்றான் விழுந்தாலும், இன்னும் ரஜினி பட இயக்குநர் என பேசப்பட்டு வருகிறார். இப்போதைக்கு ரூ 5 கோடி வரை வாங்குவதாகக் கூறுகிறார்கள்.

    பாலா

    பாலா

    இவரது சம்பளம் என்னவென்பது பெரிய புதிர். காரணம் இதுவரை இயக்கிய 6 படங்களில் 5 முதல் காப்பி அடிப்படையில் எடுக்கப்பட்டது. அத்தனைப் படங்களிலும் பட்ஜெட் அதிகமாகி, தயாரிப்பாளருடன் மோதி, பின்னர் ஒருவழியாக வெளியிடுவார்கள். ஓவர் பட்ஜெட் என்றாலும் அவன் இவன் மட்டும் பிரச்சினையின்றி வெளியானது. ஒரு படத்துக்கு மொத்தமாக ஒரு தொகையை வாங்கி விடுவாராம். அதில் அவர் சம்பளம் ரூ 5 கோடி. ஆனால் டெக்னீஷியன்கள், நடிகர்களுக்கு சம்பளம் தருவதில் பாலாவை கொண்டாடுகிறார்கள்.

    கேஎஸ் ரவிக்குமார்

    கேஎஸ் ரவிக்குமார்

    எவர்கிரீன் கமர்ஷியல் இயக்குநர். மினிமம் கேரண்டி. இவர் இயக்காத டாப் நடிகர்களே இல்லை. இன்னும் லைம்லைட்டில் இருக்கிறார். இரண்டு ரஜினி படங்களை கைவசம் வைத்துள்ளார். போலீஸ்கிரி எனும் பாலிவுட் படத்தை இயக்கி வரும் ரவிக்குமார், அடுத்து இயக்கவிருப்பது ரஜினியின் ராணாவை. சம்பளம் ரூ 5 கோடி. சம்பள விஷயத்தில் எப்போதுமே ரொம்ப தாராளம் காட்டுவார் ரஜினி. ரவிக்குமாரே வாயடைத்துப் போகும் அளவு சம்பளத்தை கஞ்சத்தனத்துக்குப் பெயர்போன கவிதாலயாவிடமிருந்து பெற்றுத் தந்தவர் சூப்பர் ஸ்டார். ஈராஸ் படத்துக்கு கேட்க வேண்டுமா!

    செல்வராகவன்

    செல்வராகவன்

    இவர் இயக்கிய படங்களில் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் இரண்டு மட்டும்தான் சூப்பர் ஹிட். மற்றவை சுமார் ஹிட். புதுப்பேட்டை தோல்வி. இப்போது இரண்டாம் உலகம் படத்தை இயக்கி வருகிறார். ரூ 4 கோடி வரை சம்பளம் பெறுகிறாரா.

    லிங்குசாமி

    லிங்குசாமி

    ஆனந்தம், ரன் இரண்டும் ஓடிய ஓட்டத்தைப் பார்த்து ஜி படத்துக்கு கால்ஷீட் தந்தார் அஜீத். ஆனால் அந்தப் படம் அவுட். கொடுமை என்னவென்றால், அப்படியொரு படத்தை இயக்கியதாக லிங்குசாமி எங்குமே சொல்லிக் கொள்வதில்லை. சண்டைக் கோழி, பையா என ஹிட் கொடுத்த லிங்குசாமி, இப்போது பெரும்பாலும் சொந்தத் தயாரிப்பைத்தான் இயக்குகிறார். அவரது சம்பளமாக ரூ 4 கோடி வரை போட்டுக் கொள்கிறாராம்.

    ஹரி

    ஹரி

    கமர்ஷியல் இயக்குநர்களில் இவர் கே எஸ் ரவிக்குமாரின் வாரிசு. இவரது படங்களில் 90 சதவீதம் வெற்றிதான். சூர்யாவின் சிங்கம் அதிகபட்ச வசூலைக் குவித்தது. இப்போது அதன் தொடர்ச்சியை எடுத்து வருகிறார் சிங்கம் 2 என்ற பெயரில். இவர் வாங்கும் சம்பளம் ரூ 4 கோடி!

    கவுதம் மேனன்

    கவுதம் மேனன்

    மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய நான்கு ஹிட்கள் தந்திருக்கிறார். அஜீத், விஜய் படங்களை இயக்குவதாக பெரிய விளம்பரமெல்லாம் தந்து கைவிடப்பட்டது இவருக்கு மைனஸ். ஆஸ்தான நாயகன் சூர்யாவை வைத்து மீண்டும் இயக்க முயற்சிக்கிறார். இடையில் இவருக்கும் பார்ட்னர் எல்ரெட் குமாருக்கும் பணத் தகராறு வேறு இமேஜை டேமேஜ் செய்துள்ளது. ரூ 4 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். ஆனால் கையில் இப்போதைக்கு படமில்லை!

    வெங்கட் பிரபு

    வெங்கட் பிரபு

    மசாலா மன்னன் இவர். கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் புரொஜெக்டை நம்பி தரலாம். சுவாரஸ்யமாக படம் தருவதில் கில்லாடி. சென்னை 28, சரோஜா, கோவா, மங்காத்தா என எல்லாமே பார்த்து ரசிக்கும் விதத்தில் அமைந்தன. இப்போது பிரியாணி தயாராகிக் கொண்டிருக்கிறது. இவரது சம்பளம் ரூ 3 கோடி.

    ராஜேஷ் எம்

    ராஜேஷ் எம்

    இவர் இயக்கத்தில் இதுவரை வெளியான மூன்று படங்களும் நல்ல வெற்றிப் படங்கள். அடுத்து ஆல் இன் ஆல் அழகுராஜாவை இயக்கி வருகிறார். சம்பளம் ரூ 3 கோடி.

    ஏஎல் விஜய்

    ஏஎல் விஜய்

    தெய்வத் திருமகள், மதராசப்பட்டினம் ஆகிய இரண்டு படங்கள்தான் இவர் இயக்கியவற்றில் வெற்றியை ருசித்தன. கடைசியாக வந்த தாண்டவம் கூட அவுட்தான். ஆனால் நடிகர் விஜய்யுடன் இணைந்து தலைவாவை இயக்கிக் கொண்டிருப்பதால், அடுத்து பெரும் வெற்றி தருவார் என எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. தயாரிப்பாளர், ஹீரோ இருவருக்குமே ரொம்ப இணக்கமான இயக்குர் என்ற நல்ல பெயரைச் சம்பாதித்திருப்பது விஜய்யின் ப்ளஸ். ரூ 3 கோடி வரை சம்பளம் பெறுவதாக சொல்கிறார்கள்.

    English summary
    Here is the list of A grade film directors salary in Kollywood. Director Shankar is tops in the list and he is getting Rs 15-18 cr per movie as on date.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X