Yash: லீக்கான ஒரே ஒரு போட்டோ.. இணையமே சும்மா அதிருது.. சிக்ஸ் பேக்ஸ் உடன் மாஸ் லுக்கில் யாஷ்!
சென்னை: கீது மோகன்தாஸ் இயக்கத்தில் ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்து வரும் திரைப்படம் டாக்ஸிக். இப்படத்தின் ஷூட்டிங் வீடியோ லீக் ஆகி இணையத்தில் படு வைரலாகி வருகிறது. லீக்கான வீடியோ ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது.
வெறும் 300 ரூபாயுடன் வீட்டை விட்டு ஓடிவந்த யாஷ், இன்று உச்ச நடிகராக உயர்ந்து இருக்கிறார். நடிகராக வேண்டும் என்ற ஆசையில், கடுமையாக உழைத்து, கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்து படிப்படியாக தன்னை தயார்படுத்திக் கொண்டார் யாஷ். பல கட்டபோராட்டங்களுக்கு பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. பல சோதனைகள், பல அவமானங்கள், பல கேலிப் பேச்சுகள் அனைத்தையும் கடந்து இன்று உலகமே கொண்டாடும் நடிகராக இருக்கிறார்.
நடிகர் யாஷ்: கேஜிஎஃப் முதல் பாகத்தில் கிடைத்த வரவேற்பை விட இரண்டாம் பாகத்தில் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் யாஷ். திடமான தேகம், ஷார்ப்பான பார்வை, மிரட்டலான நடிப்பு, அம்மாவுக்காக தவிக்கும் மனம் என ஒவ்வொரு காட்சியிலும், யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்து இருப்பார். கே.ஜி.எஃப் பார்ட் 2 அனைத்து திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளியது.

மிரட்டும் யாஷ்: தற்போது யாஷ் நடித்து வரும் 'டாக்ஸிக்' ஷூட்டிங் வீடியோ லீக் ஆகி இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அதில், யாஷ், சட்டை இல்லாமல், அடர்ந்த மீசையுடன், வாயில் சிகரெட்டுடன் இருக்கிறார். சிக்ஸ் பேக்குடன் அவரின் முரட்டுத்தனமான தோற்றம் அவரின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படத்தில், யாஷ் மொத்தமாக வேறு ஒரு தோற்றத்தில் இருக்கிறார். கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், கீது மோகன்தாஸ் இயக்கும் இந்தப் படத்தில், மலையாள நடிகர் டொவினோ தாமஸ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். 'டாக்கிக்' திரைப்படம் முதலில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், படத்தின் பணிகள் முடிவடையாததால், படம் அடுத்த ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. யாஷின் முந்தைய படமான 'கே.ஜி.எஃப்' பெரும் வெற்றி பெற்றதால், 'டாக்கிக்' படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ராமாயணம்: 'டாக்கிக்' படம் மிட்டுமில்லாமல் நிதேஷ் திவாரி இயக்கும் 'ராமாயணம்' படத்தில் ராவணனாக நடித்து வருகிறார். இதில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர். ரகுல் ப்ரீத் சிங், லாரா தத்தா, சன்னி தியோல் என முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம், நடிகர் யாஷின் மான்ஸ்டர்மைண்ட் கிரியேஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், நடிகர் யாஷின் சம்பளம்,ரூ.200 கோடி என்றுகூறப்படுகிறது. பொதுவாக படத்தில் ஹீரோவாக நடிக்கும் நடிகர்களுக்குத்தான் அதிக சம்பளம் வழங்கப்படும். ஆனால், ராமாயண படத்தில் வில்லனாக நடிப்பதற்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











