twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாடத்தி - தாக்கத்தை ஏற்படுத்தும் படைப்பு!.. சினிமா ரசிகர்கள் பார்த்தே தீர வேண்டும்

    |

    சென்னை: இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கி தயாரித்துள்ள படம் மாடத்தி. தற்போது Nee Stream ல் காண கிடைக்கிறது.

    இந்த படத்தின் திரைக்கதையை லீனா மணிமேகலையுடன் இணைந்து ரஃபிக் இஸ்மாயில் மற்றும் யவனிகா ஸ்ரீராம் எழுதியுள்ளனர்.

    அஜ்மினா காசிம், பேட்ரிக் ராஜ், செம்மலர் அன்னம் மற்றும் அருள் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

     பிசாசு 2வில் ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பு… நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்… இயக்குனர் மிஷ்கின்! பிசாசு 2வில் ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பு… நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்… இயக்குனர் மிஷ்கின்!

    புதிரை வண்ணார்

    புதிரை வண்ணார்

    ஊருக்கு வெளியே வசித்து வரும் புதிரை வண்ணார் சமூகத்தை சார்ந்த ஒரு குடும்பம். வண்ணார் சமூகத்தையே தீண்டத்தகாதவர்கள் என கருதும் சமூகத்தினர் மத்தியில் புதிரை வண்ணார் மக்களை பார்த்தாலே தீட்டு என அந்த ஊரில் சில சமூகத்தினர் கருதுகின்றனர். புதிரை வண்ணார் சமூகத்தை சார்ந்த யோசனா & அவள் குடும்பத்தினர் ஊர் மக்களால் படும் அவலம், அவர்களின் வலி குறித்து பேசும் படமே மாடத்தி.

    தனித்திரை ஆளுமை

    தனித்திரை ஆளுமை

    செங்கடல் (Cinema Verite 2011), White Van Stories (2015, Feature Documentary), Is it too much to ask (2017, Documentary) போன்ற படங்களை இயக்கிய தனித்திரை ஆளுமை கொண்ட லீனா மணிமேகலையின் படைப்பே இந்த மாடத்தி திரைப்படம். சமூக நீதி கருத்தை இந்த படத்தில் மனதில் பதியும் படி கொடுத்துள்ளார் லீனா மணிமேகலை.

    விருதுகளை வென்றது

    விருதுகளை வென்றது

    தென் கொரியாவின் பூசான் திரைப்பட விழா, கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா,சிகாகோ தெற்காசிய திரைப்பட விழா, என பல முக்கிய திரைப்பட விழாக்களில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மாடத்தி திரைப்படம் பாராட்டுகளை அள்ளியது. சிறந்த திரைப்படத்துக்கான தங்க கைலாசா விருது, சிறந்த நடிகைக்கான விருது & சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது (2020 அவுரங்காபாத் சர்வதேச திரைப்பட விழா) ஆகியவற்றையும் மாடத்தி திரைப்படம் வென்றுள்ளது.

     குவியும் பாராட்டுக்கள்

    குவியும் பாராட்டுக்கள்

    லீனா மணிமேகலை இந்த கதையை விவரிக்கும் விதம் இந்த படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. முடிவில் நம்மிடையே இந்த படம் கண்டிப்பாக ஒரு தாக்கத்தை விட்டு செல்லும். சர்ச்சைகளுக்கு இடையில் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

    English summary
    Diretor, writer Leena Manimegalai's movie Madathi will be streamed in OTT.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X