திருட்டு பிரின்ட்டில் பார்க்காதீங்க.. அடுத்த மாத வாடகைக்கே கஷ்டம்.. மாடத்தி இயக்குநர் வேண்டுகோள்!

சென்னை: மாடத்தி படத்தை இயக்கி உள்ள இயக்குநர் லீனா மணிமேகலை ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

திருட்டு பிரின்ட்டில் மாடத்தி படத்தை பார்க்க வேண்டாம் என்றும், ஒடிடி தளத்தில் உரிய டிக்கெட் வாங்கி படத்தை பாருங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

லீனா மணிமேகலையின் ட்வீட் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

லீனா மணிமேகலை

லீனா மணிமேகலை

நடிகர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டவர் லீனா மணிமேகலை. சுதேசியாக படங்களை இயக்கியும் தயாரித்தும் வரும் இவர் சமீபத்தில் இயக்கி உள்ள படம் தான் மாடத்தி. நீ ஸ்ட்ரீம் எனும் ஒடிடி தளத்தில் இந்த படம் வெளியாகி இருக்கிறது.

மாடத்தி

மாடத்தி

டாக்குமென்ட்டரி இயக்குநரான லீனா மணிமேகலை செங்கடல் என ஏற்கனவே 100 நிமிடங்கள் ஓடக் கூடிய ஒரு படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது மாடத்தி எனும் படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். வித்தியாசமான கதைக்களத்துடன் அந்த படம் வெளியாகி இருக்கிறது.

திருட்டு பிரின்ட்

திருட்டு பிரின்ட்

நெட்பிளிக்ஸில் வெளியான ஜகமே தந்திரம் முதல் நீ ஸ்ட்ரீமில் வெளியாகி உள்ள மாடத்தி வரை அனைத்து படங்களும் ஹெச்.டி. தரத்தில் தமிழ்ராக்கர்ஸ் போன்ற பைரசி தளங்களில் பரவி வருகின்றன. டெலிகிராமிலும் டவுன்லோடு லிங்குகள் குவிந்து வருகின்றன.

வாடகைக்கே கஷ்டம்

வாடகைக்கே கஷ்டம்

"PiratedCopy பாக்கிறவங்களுக்கு ஒரு வேண்டுகோள்.கோடிகளைக் கொட்டி எடுக்கப்படும் படங்களை அதைவிட கோடிகளைக் கொடுத்து வாங்கிக் கொள்கின்றன நிறுவனங்கள்.மாடத்தி படத்தின் நிலவரம் வேறு. Neestream தளத்தில் நீங்கள் டிக்கெட் வாங்கிப் பார்த்தால் மட்டுமே நான் அடுத்தமாதம் வீட்டுவாடகை கட்டமுடியும்" என புலம்பி உள்ளார்.

Recommended Video

நான் Simbhuவ KISS பண்ணல | Harshika Blasts on fake Gossip | Un Kadhal Irundhal
திருட்டு பிரின்ட்டுக்கு ஆதரவா

திருட்டு பிரின்ட்டுக்கு ஆதரவா

உங்கள் படத்தை மட்டும் திருட்டு பிரின்ட்டில் பார்க்கக் கூடாது என்றும், பெரிய பட்ஜெட் படங்களை திருட்டு பிரின்ட்டில் பார்த்தாலும் பரவாயில்லை என்பது போல இருக்கிறது உங்கள் ட்வீட் என நெட்டிசன்கள் லீனா மணிமேகலையின் ட்வீட்டுக்கு எதிரான கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

அப்படி சொல்லல

அப்படி சொல்லல

கண்டிப்பா அப்படி நான் சொல்ல வரல.. பெரிய நிறுவனங்கள் கட்டுப்படுத்த முடியாத பைரசியால் ஏற்படும் பாதிப்பை சமாளிக்கும் அளவுக்கு இருக்கின்றன. ஆனால், எங்களால் அது இயலவில்லை என்று தான் கூறியுள்ளேன் என்று அதற்கும் விளக்கம் கொடுத்துள்ளார். பைரசிகளை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் பல நல்ல கலைஞர்கள் இப்படி கஷ்டப்படும் சூழலுக்கு ஆளாகி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X