»   »  தம் அடித்த ஷாருக்கானுக்கு நோட்டீஸ்

தம் அடித்த ஷாருக்கானுக்கு நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil
Click here for more images

பொது இடத்தில் சிகரெட் பிடித்ததற்காக பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு தேசிய புகையிலை ஒழிப்பு அமைப்பு எனற பொது நல அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஷாருக் கானுக்கு 'தம்' அடிக்கும் பழக்கம் நீண்ட காலமாகவே உண்டு. அதை தன்னால் விட முடியவில்லை என்று பலமுறை கூறியிருக்கிறார்.

தீவிர கிரிக்கெட் ரசிகரான ஷாருக் சமீபத்தில் மும்பையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்த 20-20 கிரிக்கெட் போட்டியை காண மனைவி குழந்தைகளுடன் வந்தார்.

ஷாருக் கானால் நீண்ட நேரமாக சிகரெட் பிடிக்காமல் அமர்ந்திருக்க முடியவில்லை. ஸ்டேடியத்திலேயே தம் அடிக்க ஆரம்பித்து விட்டார். இதை டிவிக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்ப, போட்டோகிராபர்களும் 'க்ளிக்கி' எடுத்துவிட்டனர்.

இந் நிலையில் பொது இடத்தில் சிகரெட் பிடித்ததற்காக அவருக்கு தேசிய புகையிலை ஒழிப்பு அமைப்பு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், சிகரெட் மற்றும் புகையிலை சட்டம் 2003ஐ மீறியது குறித்து 15 நாட்களுக்குள் ஷாருக் கான் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், விளக்கம் அளிக்க அவர் தவறினால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கானோரை ரசிகர்களாக கொண்ட ஷாருக்கான் போன்ற நடிகர்கள் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு ஆதரவு கொடுக்கும் இது போன்ற செயல்களுக்கு துணை போகக் கூடாது என்று தேசிய புகையிலை ஒழிப்பு அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் சேகர் சல்கர் கூறியுள்ளார்.

Read more about: shahrukh

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil