»   »  நடிப்பிற்கு பிறந்த நாள் - சிவாஜியின் பிறந்த நாளைக் கொண்டாடும் ரசிகர்கள்

நடிப்பிற்கு பிறந்த நாள் - சிவாஜியின் பிறந்த நாளைக் கொண்டாடும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞன் என்று புகழப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 87 வது பிறந்தநாள் இன்று.

தனது கம்பீரமான வசனங்களாலும், நடிப்பாலும் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்த சிவாஜி கணேசன் கடந்த 2001 ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.

இறந்தாலும் கூட தன்னுடைய நடிப்பால் இன்னும் ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் சிவாஜி கணேசன். அவரது பிறந்த நாளான இன்று சிவாஜியின் படங்களில் தங்களைக் கவர்ந்த மற்றும் பாதித்த வசனங்களை சமூக வலைதளங்களில் போட்டு, அவரின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

அவற்றில் இருந்து ஒருசில பதிவுகளை இங்கே காணலாம்.

எதற்குக் கட்ட வேண்டும்

எதற்குக் கட்ட வேண்டும் வரி? என்று வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் இடம்பெற்ற சிவாஜி கணேசனின் வசனத்தை நினைவு கூர்ந்திருக்கிறார் இளமாறன்.

கதாபாத்திரமாகவே

அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் மகா கலைஞன் சிவாஜியின் பிறந்த நாள்" என்று சிவாஜி கணேசனின் பிறந்த நாளை நினைவு கூர்ந்திருக்கிறார் மோசக்காரா.

ஒப்பற்ற கலைஞன்

தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞன் சிவாஜி என்று அவரின் பிறந்த நாளை நினைவு கூர்ந்திருக்கிறார் சாட்டை விஸ்வநாத்.

நடிப்பிற்கு பிறந்தநாள்

சிவாஜி கணேசனின் பல்வேறு புகைப்படங்களைப் போட்டு நடிப்பிற்கு இன்று பிறந்தநாள் என்று கூறியிருக்கிறார் ஹால்ஸ்யான்.

கால் நகம் கூட நடிக்கும்

இன்று சிலர் முகம்கூட நடிக்க‌ மறுக்கும் நிலையில் உன் கால் நகம் கூட நடிக்கும்" என்று சிவாஜியின் நடிப்புத் திறமையை புகழ்ந்திருக்கிறார் பிரியம்வதா.

விக்ரம் பிரபு

சிவாஜி கணேசன் தமிழ்நாட்டின் பெருமைகளில் ஒன்றாக மாறியவர். தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றவர். இவரைப் போன்று யாரும் இன்றுவரை உருவாகவில்லை, நான் அவரின் பேரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று தனது தாத்தாவின் பிறந்தநாளை நினைவு கூர்ந்திருக்கிறார் நடிகர் விக்ரம்பிரபு.

இதைப் போன்ற மேலும் பல ரசிகர்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் சிவாஜி அவர்களுக்கு வாழ்த்துக்களைப் பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

English summary
Today Actor Sivaji Ganesan 87th Birthday. Fans Celebrating his Birthday in all Social Networks.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil