ஆக்ஷன் பிளாக்.. ரொமான்ஸில் கலக்கும் லெஜண்ட் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி.. நாளை செம அப்டேட்!

சென்னை : தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடிக்கும் திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது.

சரவணன் அருள் அவரது கடையின் விளம்பரத்திற்காக இளம் நடிகைகள் முதல் வெளிநாட்டு அழகிகள் வரை அழைத்து வந்து ஆடி வந்த சரவணன் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.

இப்படத்தை சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி-ஜெர்ரி இயக்குகின்றனர்.

தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்

தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்

சினிமா என்னும் மாய அலையில் சிக்கி பல பேர் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போய்விட்டனர். சிலர் எதிர்நீச்சல் அடித்து முன்னேறி உள்ளனர். காசு இருந்தால் போதும் ஹீரோவாகிவிடலாம் என்ற கனவில் சினிமாவில் காலடி எடுத்துவைத்துள்ளார் மிகப்பெரிய தொழிலதிபரான சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள்.

நடிகை ஊர்வசி ரௌடலா

நடிகை ஊர்வசி ரௌடலா

சரவண அருள் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடலா என்பவர் நடித்து வருகிறார்.பல கோடி ரூபாய் செலவில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பிரம்மாண்டமாக செட் போடப்பட்டு டூயட் பாடல் படமாக்கப்பட்டது. இந்த புகைப்படங்கள் கடந்தாண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

5 மொழிகளில்

5 மொழிகளில்

இந்த படத்தில் சரவணன் அருள் விஞ்ஞானியாக நடித்துள்ளாராம். இத்திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், அண்ணாச்சி நடிக்கும் முதல் திரைப்படமே பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

நாளை முக்கிய அறிவிப்பு

நாளை முக்கிய அறிவிப்பு

இந்நிலையில் தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடிக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை காலை 9.55 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. 2019ம் ஆண்டு தொடங்கிய இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தொடர்ந்து தடைப்பட்டு வந்து தற்போது ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X