ட்விட்டரில் என்ட்ரி கொடுத்த அண்ணாச்சி...முதல் ட்வீட் என்ன தெரியுமா?

சென்னை : பிரபல தொழிலபரான லெஜண்ட் சரவணன், தி லெஜண்ட் படத்தின் மூலம் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் கோலிவுட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் தன் மீது திருப்பி உள்ளார்.

ஆரம்பத்தில் விளம்பர படங்களில் டாப் ஹீரோயின்களுடன் நடித்து வந்த அண்ணாச்சி, தற்போது தானே ஹீரோ ஆகி உள்ளார். தி லெஜண்ட் படம் சையின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஜுலை 28 ம் தேதி ரிலீசாக உள்ளது.

தி லெஜண்ட் படத்தின் டிரைலர், டிரைலர் வெளியீட்டு விழா, பாடல்கள் என அனைத்தும் சினிமா ரசிகர்களை பெரிய அளவில் கவந்து விட்டது. இதனால் தி லெஜண்ட் படம், ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக அதிக எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறி உள்ளது.

கவனத்தை ஈர்த்த அண்ணாச்சி

கவனத்தை ஈர்த்த அண்ணாச்சி

தி லெஜண்ட் படம் பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் 2500 க்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட ரிலீசை முன்னிட்டு அண்ணாச்சி, சோஷியல் மீடியாவிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். படத்தின் ப்ரொமோஷனுக்காக சோஷியல் மீடியா வழியாக ரசிகர்களின் கவனத்தை மேலும் ஈர்த்து வருகிறார்.

ட்விட்டரில் செம என்ட்ரி

ட்விட்டரில் செம என்ட்ரி

நேற்று ட்விட்டரில் கணக்கை துவங்கிய லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி, முதல் போஸ்டே, டைரக்டர் ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைக்கப்பட்டுள்ள சரவணன் சரவெடி பாடலுடனான தி லெஜண்ட் படத்தின் டிரைலர் வீடியோவை வெளியிட்டுள்ளார். ரஜினி, விஜய் படங்ளை மிஞ்சும் அளவிற்கு அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது.

முதல் ட்வீட் என்ன போட்டிருக்கார்

முதல் ட்வீட் என்ன போட்டிருக்கார்

இந்த வீடியோவுடன், சோஷியல் மீடியா வழியாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. டைரக்டர் ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைக்கப்பட்டுள்ள சரவெடி உடனான எனது தி லெஜண்ட் படத்தின் டிரைலரை வழங்குகிறேன். தி லெஜண்ட் படம் 2500 க்கும் அதிகமான தியேட்டர்களில் ஜுலை 28 ம் தேதி ரிலீசாக உள்ளது என ட்வீட் போட்டுள்ளார்.

என்னது...இத்தனை ஃபாலோவர்சா

என்னது...இத்தனை ஃபாலோவர்சா

இதில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த மற்றொரு விஷயம் என்ன தெரியுமா? அண்ணாச்சி ட்விட்டரில் இணைந்த 24 மணி நேரத்திற்குள் அவரை கிட்டத்தட்ட 16,000 பேர் பின் தொடர்கிறார்கள். ஆனால் நம்ம அண்ணாச்சி இதுவரை யாரையும் பின்தொடரவில்லை. ஒரே நாளில் 15,000 க்கும் அதிகமான ஃபாலோவர்களா என அனைவரும் வாயை பிளந்து பார்த்து வருகிறார்கள். அண்ணாச்சியின் முதல் ட்வீட்டிக்கே லைக்குகளும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.

டிரெண்டிங்கில் தெறிக்க விடுறாங்களே

டிரெண்டிங்கில் தெறிக்க விடுறாங்களே

அது மட்டுமல்ல அண்ணாச்சி சோஷியல் மீடியாவில் என்ட்ரி கொடுத்ததை நெட்டிசன்கள் டிரெண்டிங் ஆக்கி உள்ளனர். #TheLegend ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X