The Legend Twitter Review: ஹீரோவான லெஜண்ட் சரவணன்.. எப்படி இருக்கு தி லெஜண்ட்?
சென்னை: லெஜண்ட் சரவணன் நடிகராக தமிழ் சினிமாவில் இன்று அறிமுகமாகி உள்ளார்.
ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன், ஊர்வசி ரவுத்தேலா, கீத்திகா திவாரி, ராய் லக்ஷ்மி, யாஷிகா ஆனந்த், பிரபு, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள தி லெஜண்ட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 2500 தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது.
அதிகாலை காட்சி எல்லாம் போட்டு அமர்க்களப்படுத்திய நிலையில், படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் போட்டுள்ள விமர்சனங்களை இங்கே பார்ப்போம்..
வெளியானது தி லெஜண்ட்
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் தயாரிப்பில் லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி உள்ள தி லெஜண்ட் திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியானது. லெஜண்ட் சரவணா எப்படித்தான் நடித்துள்ளார் என்பதை காணவே ஆவலுடன் தியேட்டருக்கு அதிகாலை காட்சிகளுக்கே படையெடுத்து சென்றுள்ளனர்.

என்னவொரு நடிப்பு
சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி படத்தில் நடிக்கிறார் என்றதுமே ட்ரோல் மீம்கள் பறக்க ஆரம்பித்தாலும், அவரது முயற்சியை பலரும் பாராட்டி இருந்தார்கள். ஆனால், தற்போது படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் அவர் நடிக்க கஷ்டப்பட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் என்னவொரு நடிப்புடா சாமி என வடிவேலு மீம்களை போட்டு வருகின்றனர்.

ஸ்பூஃப் படம்
சிவா நடித்த தமிழ்ப்படம்லாம் என்ன ஸ்பூஃப் படம், ஒரிஜினல் ஸ்பூஃப் படமே தி லெஜண்ட் தான் என ரசிகர்கள் சிலர் கலாய்த்து வருகின்றனர். நண்பர்களுடன் ஜாலியாக படத்தை தியேட்டரில் போய் பார்த்து ஒவ்வொரு காட்சிக்கும் விழுந்து விழுந்து சிரித்து விட்டு வரலாம், படம் அப்படி தரமான சம்பவமா இருக்கு என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இயக்குநர்கள் முயற்சி
சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களை எடுத்து வந்த இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி அண்ணாச்சியை வைத்து ரியல் ஜிகர்தண்டா படத்தையே பண்ணிட்டாங்க என நெட்டிசன்கள் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர். இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் முயற்சி நன்றாகவே தெரிகிறது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
தலைவன் வெறித்தனம்
குழந்தையை அழ வைத்து லெஜண்ட் சரவணனை கட்டி வைத்து வில்லன் டீம் அடிக்க வரும் நேரத்தில் எதிரிகளை அந்த நாற்காலியில் இருந்து கொண்டே அடித்து துவம்சம் பண்ணும் காட்சிகளும், அதில், அவர் கொடுக்கும் ரியாக்ஷன்களையும் எடுத்துப்போட்டு தலைவன் வெறித்தனம் என என்ஜாய் பண்ணி வருகின்றனர்.

வலிமை, பீஸ்ட், அண்ணாத்தைய ஓரங்கட்டிய அண்ணாச்சி
டாக்டர் படத்துக்கு அப்புறம் தியேட்டரில் ஒரு படத்தை இந்த அளவுக்கு சிரிச்சி பார்க்கல, சமீபத்தில் வந்த ரஜினியின் அண்ணாத்த, அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட் படங்கள் ரசிகர்களை என்டர்டெயின் பண்ண தவறிய நிலையில், இந்த படம் அந்த என்டர்டெயின்மென்ட்டைதரமா பண்ணியிருக்கு என இந்த ரசிகர் கமெண்ட் போட்டுள்ளார்.

விவேக் சீன்
சின்னக் கலைவாணர் விவேக் நம்மிடையே இன்று இல்லை என்றாலும், மரத்தை நட சொல்கிறார் தனது கடைசி படத்தின் மூலம் என தி லெஜண்ட் படத்தில் விவேக் இடம்பெற்ற காட்சியின் ஸ்க்ரீன் ஷாட்டையும் ஷேர் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

பார்க்கணும் போல இருக்கே
வருகிற ரிவ்யூலாம் பார்த்தா படத்தை ஃபிரண்ட்ஸ் கேங்குடன் ஜாலியா போய் பார்க்கலாம் போல இருக்கே என இந்த நெட்டிசன் லெஜண்ட் சரவணா பலூன் ஊதும் காட்சியை போட்டு ட்வீட் செய்துள்ளார். வயிறு குலுங்க வைக்கிறது என்றும் சரியான ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்றும் நெட்டிசன்கள் டிரெண்டிங்கை தெறிக்க விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











