twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செல்ஃபி எடுத்த அண்ணாச்சி..உங்கள நீங்களே மதிக்கலனா எப்படி?.. கருத்து சொன்ன இயக்குநர்!

    |

    சென்னை : லெஜண்ட் சரவணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது செல்பி போட்டோவை பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

    சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடிகர், நடிகைகளை வைத்து ப்ரமோஷன் பண்ணிக்கொண்டிருந்த லெஜண்ட் சரவணன், முதன் முதலில் தன்னுடைய கடை விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்து பிரபலமானார்.

    அந்த விளம்பரத்தில் நடித்த போதே ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அவை அனைத்தையும் அண்ணாச்சி அசால்டாக எதிர்கொண்டார்.

    விஷால் பிறந்தநாள் ஸ்பெஷல்...சிடிபி வெளியிட்ட பிரபலங்கள் விஷால் பிறந்தநாள் ஸ்பெஷல்...சிடிபி வெளியிட்ட பிரபலங்கள்

    லெஜண்ட் சரவணன்

    லெஜண்ட் சரவணன்

    இதையடுத்து, இரட்டை இயக்குனர்களான ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் உருவான தி லெஜண்ட் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். 50 வயதில் தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே ஹீரோவாக அறிமுகமான முதல் நடிகர் நமது லெஜெண்ட் அண்ணாச்சி தான். 50 வயதுக்கு மேல் ஹிரோவாக நடித்து வந்தாலும் 50 வயதில் யாரும் முதன்முறையாக ஹீரோவாக நடித்ததில்லை.

    தி லெஜண்ட்

    தி லெஜண்ட்

    'தி லெஜண்ட்' படம் கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அண்ணாச்சி சரவணனுடன் நாயகியாக ஊர்வசி ரவுடேலா, கீதிகா திவாரி, மறைந்த நடிகர் விவேக், யோகிபாபு, நாசர், ரோபோ ஷங்கர் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் யூட்யூபில் மில்லையன்களை கடந்தது.

    கலவையான விமர்சனம்

    கலவையான விமர்சனம்

    தி லெஜண்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் உலகம் முழுவதும் 2500 திரையரங்குகளில் வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. சுமார் 45 கோடி செலவில் உருவான 'தி லெஜண்ட்' உலக அளவில் முதல் வார முடிவில் 6 கோடி ரூபாயையும், மொத்த வசூல் 10 கோடியை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    தீவிர ஆலோசனை

    தீவிர ஆலோசனை

    தி லெஜண்ட் திரைப்படத்திற்கு பிறகு தனது அடுத்த ஆட்டத்தை தொடங்கிய அண்ணாச்சி அடுத்த படம் குறித்து தீவிர ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அந்த அதையும் கமர்சியலாக அனைவரும் பார்க்கும் படமாக இருக்க வேண்டும் என கூறி வருகிறாராம். அதற்காக பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார்.

    செல்ஃபி

    செல்ஃபி

    மக்களின் மனதை கவர ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார் லெஜண்ட் சரவணன். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது செல்பி போட்டோவுடன் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் நீங்கள் இன்ஸ்டாக்ராமிற்கும் வந்துவிட்டீர்களா என்பது போன்ற கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

    உங்களே நீங்களே மதிக்கலனா எப்படி?

    உங்களே நீங்களே மதிக்கலனா எப்படி?

    இந்நிலையில், மூடர் கூடம் இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் லெஜண்ட் சரவணனின் போட்டோவை பகிர்ந்து, உங்கள் தன்னம்பிக்கைதான் உங்கள் பலம் அண்ணாச்சி நீங்கள் தான் லெஜண்ட், அதை நம்புங்கள். உங்க இயற்கை நிறத்த நீங்களே மதிக்கலனா எப்படி? கருப்பா இருக்கற நாம வெள்ளயா காட்டிக்கனும்னு நெனைக்கறதாலதான், வெள்ளையா இருக்கறவன் தாந்தான் ஒசத்திங்கறான் என பதிவிட்டுள்ளார்.

    English summary
    Legend Saravanan shared his photo on his Instagram page. Director Naveen has commented on this photo.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X