For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சினிமாவின் என்சைக்ளோபீடியா..உலகநாயகன் பிறந்த நாள் ஸ்பெஷல் ரவுண்டப்!

  |

  சென்னை : சினிமாவை வெறும் பொழுதுபோக்காகவும், பணம் ஈட்டும் தொழிலாக பார்க்காமல், பல புதுமைகளை சினிமாவில் புகுத்தி ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், ஹீரோ என்றால் இப்பத்தான் நடிக்க வேண்டும் என்று எழுதப்படாத இலக்கணத்தை உடைத்தவர் உலக நாயகன் கமல்ஹாசன்.

  இன்று 68வது பிறந்த நாளை கொண்டாடும் கமல்ஹாசனுக்கு திரைப் பிரபலங்களும், ரசிகர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  தொலைக்காட்சி, ட்விட்டர், இன்ஸ்டாகிராம் , பேஸ்புக் பக்கங்களிலும் கமலின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகின்றன. கமலின் தீவிர ரசிகர்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

  பணம் காசோட பிள்ளைகள் தான் முக்கியம்.. வெளியேறும் போது கண்ணீர் வடித்த ஜிபி முத்து.. கலங்கிய கமல்! பணம் காசோட பிள்ளைகள் தான் முக்கியம்.. வெளியேறும் போது கண்ணீர் வடித்த ஜிபி முத்து.. கலங்கிய கமல்!

  கமல்ஹாசன்

  கமல்ஹாசன்

  நடிகர், இயக்குநர், பின்னணி பாடகர், நடன இயக்குநர், பாடலாசிரியர், கதாசிரியர், அரசியல்வாதி என பல திறமைகளை தன்னுள் வைத்திருக்கும் ஒருவர், இந்திய சினிமாவின் என்சைக்ளோபீடியா என்று அழைக்கப்படும் ஒரு கலைஞன் கமல்ஹாசன்.

  வெற்றி நாயகன்

  வெற்றி நாயகன்

  புதுமையான கதைக்களத்தில், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து, தன் நடிப்பினுடைய முழுத்திறமையும் அந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, ரசிகர்களை வியக்க வைத்தது மட்டும் இல்லாமல், எடுத்த புதுப்புது முயற்சிகள் தோல்வி அடைந்தாலும், அந்த தோல்விகளை கண்டு துவண்டு போகாமல், விடாமல் முயற்சி விஸ்வரூப வெற்றி என்று உலகமே திரும்பிபார்க்கும் அளவுக்கு ஒரு வெற்றிப்படத்தை கொடுத்து இருக்கிறார் கமல்.

  களத்தூர் கண்ணம்மா

  களத்தூர் கண்ணம்மா

  சினிமா என்றால் என்னவென்று நாம் யோசித்துக்கூட பார்க்க முடியாத நான்கு வயதில் திரைத்துறையில் நுழைந்து, பல சாதனைகளை படைத்து, பல விருதுகளை குவித்துள்ளார். இன்றைய இளம்தலைமுறைக்கு கமலை பற்றி கேட்டால், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார், விக்ரம் படத்தில் நடித்தவர் என்பது மட்டும் தான் தெரிகிறது. ஆனால், 80மற்றும் 90களில் இவர் வாங்கிக் குவித்த விருதுகளையும், சினிமாவிற்காக இவர் செய்த அற்பணிப்புகளை பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் அவர்களுக்காக இந்த பதிவு.

  கடைக்குட்டி

  கடைக்குட்டி

  ராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கும் பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்த டி.சீனிவாசனுக்கும், ராஜலக்ஷ்மி அவர்களுக்கும் மகனாக பிறந்தவர் கமல்ஹாசன். நான்கு குழந்தைகளில், கடைக்குட்டியாகப் பிறந்த கமலுக்கு, இளம் வயதிலிருந்தே, படிப்பைத் தவிர மற்ற கலைகளில் ஆர்வம் அதிகமிருந்ததால், மிகுதியான நேரத்தை அதில் செலவிட்டார். சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி ரகு இவருடைய உடன் பிறந்தவர்கள். கமல் அவர்களின் தந்தை, கட்டுப்பாடு மிகுந்தவராக இருந்ததால், தனது மகன்களை படிக்க வைக்க எண்ணினார். அவரின் எண்ணத்தை கமலின் மூத்த சகோதரர்கள் இருவரும் நிறைவேற்றினார்கள். ஆனால், கமல் தனது திறமையை நடிப்பில் காட்டினார்.

  அரங்கேற்றம்

  அரங்கேற்றம்

  சினிமாவில் எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்ற கனவோடு இருந்த கமல்ஹாசனுக்கு கே பாலச்சந்தரின் அரங்கேற்றம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இந்த படம் அவருக்கு திரும்புமுனையாக அமைந்தது. இதையடுத்து, சொல்லத்தான் நினைக்கிறேன், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள் என அடுத்தடுத்து படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

  சப்பாணி

  சப்பாணி

  16 வயதினிலே படத்தில் ரஜினியுடன் கமல் நடித்திருந்தார். இந்த படத்தில் சப்பாணி என்ற கதாபாத்திரத்தில் இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருந்தார். உடல் மொழி, பார்வை, வசனம் பேசும் விதம் என ஒவ்வொன்றும் கமல் படங்களில் உயிர்ப்புடன் இருக்கும். தமிழகத்தில் பேசப்படும் சென்னை தமிழ் முதல் கொங்கு தமிழ் வரை அத்தனை தமிழையும் அசால்ட்டாக பேசி ஆச்சரியப்படச் செய்வார். அதுமட்டுமின்றி, தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட பெரும்பாலான இந்திய மொழிகள் அனைத்தையும் பேசுவார்.

  மிரண்டு போன பாலிவுட்

  மிரண்டு போன பாலிவுட்

  கமல் தன்னுடைய 100வது படமான ராஜபார்வை படத்தில் பார்வையற்றவராக நடித்து ஒட்டுமொத்த ரசிகர் மனதிலும் சிம்மானதில் அமர்ந்துவிட்டார். கோலிவுட்டில் கலக்கிய கமலுக்கு பாலிவுட்டில் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்தியில் அவர் நடித்த முதல் படம் 'ஏக் துஜே கேலியே'. இந்த படம் தமிழ் நடிகர் ஒருவர் இந்தியில் நேரடியாக கதாநாயகனாக நடித்த முதல் படமாகும். இந்த படம் பாலிவுட்டே மிரண்டு போகும் அளவுக்கு பிளாக் பஸ்டர் ஹிட்டாகிறது.

  ஏராளமான விருதுகள்

  ஏராளமான விருதுகள்

  கமல்ஹாசன் 4 தேசிய விருதும், சிறந்த தயாரிப்பாளருக்கான ஒருமுறை தேசிய விருதும், 10 தமிழக அரசின் திரைப்பட விருதுகள்கள், 4 ஆந்திர அரசின் நந்தி விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள், பத்ம பூசண், பத்மவிபூஷன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல், சத்தியபாமா பல்கலைக்கழகம் கமல்ஹாசனுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

  சிறப்பான ஆண்டு

  சிறப்பான ஆண்டு

  கமலுக்கு இந்த ஆண்டு ஒரு சிறந்த ஆண்டாகவே அமைந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் உலகையே திரும்பிபார்க்க வைக்கும் அளவுக்கு 450 கோடிக்கும் மேல் வசூலாகி சாதனை படைத்துள்ளது. சீக்ரெட் ஏஜென்ட்டாக நாயகன் நடித்திருந்தார். கமலின் முந்தைய படத்தின் தொடர்ச்சியாகவே இந்த படம் வெளியாகி இருந்தது.

  இந்தியன் 2

  இந்தியன் 2

  அடுத்ததாக இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இரண்டு வருடங்கள் கழித்து மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல், எச் வினோத் இயக்கத்திலும் கமல் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் குறித்தான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  English summary
  Legendary actor Kamal Haasan has ruled the hearts of millions of decades with his persona and measured acting. Kamal Haasan Birthday special round up
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X