விவேக் தொகுப்பாளராக சிரிக்க வைத்த கடைசி காமெடி நிகழ்ச்சி ...LOL "எல் ஓ எல்- எங்க சிரி பாப்போம்"

சென்னை : "எல் ஓ எல்- எங்க சிரி பாப்போம்"இந்த ஆறு-அத்தியாய எழுதப்படாத (அன்ஸ்க்ரிப்டட்) ரியாலிட்டி நகைச்சுவை (காமெடி) தொடர்கள் 240 நாடுகள் மற்றும் பல தேசங்களில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஸ்ட்ரீம் ஆகும்.

எஸ் ஓ எல் ப்ரொடெக்ஷன் ப்ரைவெட் லிமிட்டெட்டால் தயாரிக்கப்பட்டு, பத்மஸ்ரீ நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகருமான, மறைந்த விவேக் , நடிகர் ஷிவாவுடன் தொகுத்து வழங்கும் இந்த தொடர் ஒரே இடத்தில் 10 பிரபலமான தமிழ் நகைச்சுவை நடிகர்கள் மற்றும் பொழுதுபோக்கு அளிப்பவர்களைக் கொண்டிருக்கும்.

அமேசான் ப்ரைம் சமீப காலமாக தனித்தன்மையான திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டான்ட்-அப் காமெடி, அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசன் ப்ரைம் ம்யூசிக் மூலமாக விளம்பரம்-இல்லா இசை கேட்பது, இந்தியாவின் பொருட்கள் தேர்வில் இலவச விரைவு டெலிவரி, மற்றும் ப்ரைம் கேமிங்குடன் மொபைல் கேமிங்க் உள்ளடக்க விஷயம் ஆகிய அனைத்தையும் பல ஆபர்களுடன் ஸ்ட்ரீம் செய்வதை நம்ப முடியாத மதிப்பை பெறுகிறது .

எழுதப்படாத நகைச்சுவை

எழுதப்படாத நகைச்சுவை

இந்தியா , ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா எங்கிலும் உள்ள பல நாடுகளில் எல் ஓ எல்: "ஹஸ்ஸே தோ ஃபஸ்ஸே"-வின் அறிமுகத்தை தொடர்ந்து , அமேசான் ப்ரைம் , அமேசான் ஒரிஜினல் தொடரான எல் ஓ எல்-ன் தமிழ் பதிப்பை அறிவித்தது. எல் ஓ எல் (சத்தமாக சிரி) எங்க சிரி பாப்போம் என தலைப்பிடப்பட்ட, எழுதப்படாத நகைச்சுவை ரியாலிட்டி தொடர் இந்த மாதம் உலகெங்கிலும் தனித்தன்மையாக ப்ரைம் வீடியோவில் அறிமுகப்படுத்தப்படும். பத்மஸ்ரீ விருது பெற்றவரும் , புகழ்பெற்ற நகைச்சுவை நடிகருமான மறைந்த விவேக் மற்றும் காமெடி படங்களுக்கு பெயர்பெற்ற நடிகர் ஷிவா இந்த தொடரின் தொகுப்பாளர்கள் மற்றும் நடுவர்களாக காணப்படுவார்கள்.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

எல் ஓ எல் -எங்க சிரிங்க பார்ப்போமில் மாயா எஸ் க்ரிஷ்ணன், அபிஷேக் குமார், ப்ரேம்ஜி அமரன், ஹாரதி கணேஷ், ஆர் ஜே விக்னேஷ் காந்த், சதீஷ், புகழ், பவர்ஸ்டார் ஸ்ரீநிவாசன், பேகி (பார்கவ் ராமக்ரிஷ்ணன்), மற்றும் ஸ்யாமா ஹரினி உட்பட பத்து நகைச்சுவை நடிகர்கள், இரண்டு தொகுப்பாளர்களின் விழிப்பான பார்வையின் கீழ் ஒரே இடத்தில் ஒருவருக்கொருவர் எதிராக களம் இறங்குவார்கள். பல வகையைச் சேர்ந்த தமிழ் நகைச்சுவை பொழுதுபோக்காளர்களை இணைக்கும், LOL - எல் ஓ எல் - எங்க சிரி பாப்போம்-ன் முதல் காட்சி அமேசான் ப்ரைம் வீடியோவில் ஆகஸ்ட் 27 அன்று வெளியிடப்படும்.

அஞ்சலி செலுத்தும் வகையில்

அஞ்சலி செலுத்தும் வகையில்

மறைந்த நடிகர் பத்மஸ்ரீ விவேக் என்ற திறமைசாலிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அமேசான் ப்ரைம் வீடியோ, இண்டியா, இண்டியா ஒரிஜினல்ஸ் தலைவர், அபர்ணா புரோஹித் கூறியது " இது எங்களுக்கு உணர்வுபூர்வமான ஒரு தருணம் . நாங்கள் அவருடைய இழப்பிலிருந்து இன்னும் மீண்டும் வராத போதும், விவேக் சாருடன் வேலை செய்வதற்கான ஒரு வாய்ப்பு எங்களுக்கு கிடைத்ததில் நாங்கள் மிக்க அதிர்ஷ்டசாலிகள் என உணர்கிறோம். எல் ஓ எல்: எங்க சிரி பாப்போம் அவருக்கு மற்றும் அவருடைய ரசிகர்களுக்கு ஒரு பிரத்யேக காணிக்கை ஆகும். விவேக் சார் தொடர்ந்து நம்முடைய இதயங்கள் மற்றும் நினைவுகளில் வாழ்வார்."
என்று தன் கருத்தை பதிவு செய்தார்

நகைச்சுவை நடிகர்களின்

நகைச்சுவை நடிகர்களின்

அது மட்டும் அல்லாமல் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட இந்த நிகழ்ச்சியின் ஹிந்தி வடிவமான: "ஹசே தோ ஃபசே"வை நிறைய பார்வையாளர்கள் ரசித்தனர். மற்றும் ஆழ்ந்த தன்னடக்கத்துடன் , நாங்கள் இந்த சர்வதேச வடிவத்தின் தமிழ் பதிப்பை அறிவிக்கிறோம். தனித்தன்மையாக தமிழில் உருவாக்கப்பட்ட, "எல் ஒ எல்: எங்க சிரி பாப்போம்", எங்கள் போட்டியாளர்களாக தமிழ் நாட்டின் மிக பிரபலமான சில நகைச்சுவை நடிகர்களின் ஒரு புகழ்பெற்ற ஹிட் லிஸ்ட் கொண்டிருக்கிறது.

தொகுப்பாளர் மற்றும் நடுவராக

தொகுப்பாளர் மற்றும் நடுவராக

விவேக் சாருடன், மிக செழுமையான நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான ஷிவாவும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மற்றும் நடுவராக நம்முடன் சேர்கிறார். இந்த நிகழ்ச்சி மிகவும் சரியான நேரத்தில் தேவையான மனஓய்வைக் கொண்டு வரும் மற்றும் பார்வையாளர்களைக் கவர்ந்து பொழுதுபோக்கு அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார் .

இதயத்திற்கு மிக நெருக்கமானது

இதயத்திற்கு மிக நெருக்கமானது

ஆர் ஜேவிலிருந்து பிரபல நடிகராக மாறியவர் - இந்த தொடரின் இணை- தொகுப்பாளருமான ஷிவா. மனதிலிருக்கும் பல நினைவுகளை சிவாவும் பகிர்ந்து கொண்டார் "எல் ஓ எல் - எங்க சிரி பாப்போம் என்னுடைய இதயத்திற்கு மிக நெருக்கமானது ஏனென்றால் மகத்தான நடிகர் மற்றும் எனக்கு பிடித்த பொழுது போக்காளருமான விவேக் சாருடன் இது என்னுடைய கடைசி படப்பிடிப்பு.

தமிழ் பார்வையாளர்களுக்கு

தமிழ் பார்வையாளர்களுக்கு

அவருடைய பன்முகத்தன்மை மற்றும் வசீகரத்துடன், விவேக் சார் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியை ஒரு முழுமையான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஆக்குவதில் கூடுதல் அளவு காமெடியை சேர்த்திருக்கிறார். அவருடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் எனக்கு அற்புதமான ஒரு நேரம் கிடைத்தது.
அமேசான் ப்ரைம் வீடியோவுடன் இணைந்து , உலகெங்கிலும் உள்ள தமிழ் பார்வையாளர்களுக்கு இந்த தனித்தன்மையான எழுதப்படாத நிகழ்ச்சியைக் கொண்டுவருவதில் சிலிர்ப்படைகிறேன்"

Recommended Video

Shooting spot ல கூட மரம் நடுவார் vivek |Director Radha Mohan chat part-02| Filmibeat Tamil
கடைசி வரை நிற்பவரே

கடைசி வரை நிற்பவரே

இந்த பத்து போட்டியாளர்களும் தொடர்ச்சியாக ஆறு மணி நேரங்களுக்கு இரண்டு நோக்கங்களுடன் போட்டியிடுவார்கள்- வீட்டில் உள்ள மற்றவர்களை சிரிக்கச் செய்வது மற்றும் அவர்களே சிரிக்காமல் இருப்பதை உறுதி செய்வது. இப்படி பட்ட ரூல்ஸ் இருந்தாலும் ஒரே ஒரு எளிமையான விதி என்னவென்றால்
- நீங்கள் சிரித்தால் , நீங்கள் தோற்றுவிடுவீர்கள்! கடைசி வரை நிற்பவரே பட்டத்தை வெல்வார் . மிகப் பெரிய தொகையான ரூ 25 லட்சத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்வார் வெற்றி பெரும் நபர் என்பது குறிப்படத்தக்கது .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X