twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாசமலர், அன்பே வா படங்களுக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ் காலமானார்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

    |

    சென்னை: தமிழ் திரையுலகின் மூத்த வசனகர்த்தா ஆரூர்தாஸ் இன்று வயதுமூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 91.

    எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என தமிழ் சினிமாவின் மறைந்த பல திரை ஜாம்பவான்களின் படங்களுக்கு இவர் வசனம் எழுதி உள்ளார்.

    திநகர் நாதமுனி தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்த ஆரூர்தாஸ் ஞாயிற்றுக்கிழமை (20/11/2022) இயற்கை எய்தினார். அவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    தேவா The தேவா நிகழ்ச்சியில் பாட்ஷா வராம எப்படி.. மாஸ் என்ட்ரி கொடுத்த ரஜினிகாந்த்! தேவா The தேவா நிகழ்ச்சியில் பாட்ஷா வராம எப்படி.. மாஸ் என்ட்ரி கொடுத்த ரஜினிகாந்த்!

    ஆரூர்தாஸ் காலமானார்

    ஆரூர்தாஸ் காலமானார்

    1931ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி திருவாரூரில் பிறந்த பிரபல எழுத்தாளர் ஆரூர்தாஸ் வயதுமூப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை தனது இல்லத்தில் மாலை 6.40 மணியளவில் காலமானார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட எண்ணற்ற திரை நட்சத்திரங்களின் பல வெற்றிப்படங்களுக்கு வசனம் எழுதிய பெருமைக்குரியவர் ஆரூர்தாஸ்.

    எம்ஜிஆர், சிவாஜி படங்களுக்கு

    எம்ஜிஆர், சிவாஜி படங்களுக்கு

    1954ம் ஆண்டு வெளியான நாட்டியதாரா படத்தின் மூலம் சினிமாவில் வசனகர்த்தாவாக அறிமுகமானவர் ஆரூர்தாஸ். எம்ஜிஆரின் தாய் சொல்லை தட்டாதே, அன்பே வா, தாயை காத்த தனயன், குடும்பத் தலைவன் உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் வசனம் எழுதி உள்ளார். சிவாஜியின் பாசமலர், புதிய பறவை, தெய்வ மகன், அன்னை இல்லம் உள்ளிட்ட எண்ணற்ற படங்களுக்கு இவர் வசனம் எழுதி உள்ளார்.

    தெனாலி ராமன்

    தெனாலி ராமன்


    சிவாஜியின் குடும்பம் ஒரு கோயில் படத்துக்கு பிறகு பெரிதளவில் தமிழ் சினிமா படங்களுக்கு வசனம் எழுதாமல் தெலுங்கு டப்பிங் படங்களுக்கு வசனம் எழுதி உள்ளார். கடைசியாக 2014ம் ஆண்டு வடிவேலு நடிப்பில் வெளியான தெனாலி ராமன் படத்திற்கு ஆருர்தாஸ் வசனம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இயக்குநர் அவதாரம்

    இயக்குநர் அவதாரம்

    திரைக்கதை, வசனம் எழுதி வந்த ஆரூர்தாஸ் ஜெமினி கணேசன் நடித்த பெண் என்றால் பெண் என்கிற படத்தை இயக்கினார். ஆனால், அதன் பின்னர் ஆரூர்தாஸ் எந்தவொரு படத்தையும் இயக்கவில்லை. பேபி என்பவரை மணந்த ஆரூர்தாஸுக்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை சென்னை திநகரில் வசித்து வந்த ஆரூர்தாஸ் காலமான நிலையில், அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    இறுதிச்சடங்கு

    இறுதிச்சடங்கு

    ஆரூர்தாஸ் மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மாதா கேஸல், 20/35, நாதமுனி தெரு, தி நகரில் உள்ள இல்லத்தில் நாளை (நவம்பர் 21, திங்கட்கிழமை) மதியம் 12 மணி வரை அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். பின்னர் இறுதி சடங்குகள் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Legendary Dialogue Writer Aaroor Dass passes away at the age of 91 due to age related issue. Tamil Cinema Celebrities mourns for the great loss to Tamil Cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X