twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதிர்ச்சி.. பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்.. சோகத்தில் மூழ்கிய இசையுலகம்

    |

    சென்னை: பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 78. உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    10 ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்பாடல்களை பாடி இந்திய இசையுலகையே ஆட்சி செய்து வந்தவர் வாணி ஜெயராம்.

    இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    மொட்டை தலையுடன் ஆழ்வார்க்கடியான் வேடத்தில் ஜெயராம்..பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!மொட்டை தலையுடன் ஆழ்வார்க்கடியான் வேடத்தில் ஜெயராம்..பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!

    காற்றோடு கலந்தது குயில்

    காற்றோடு கலந்தது குயில்

    1000 திரைப்படங்கள், 19 மொழிகள், 10 ஆயிரம் பாடல்கள் என இந்திய இசைத்துறையில் கோலோச்சி வந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடல்நலக்குறைவு காரணமாக சற்று முன் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 78.

    கீழே விழுந்து அடிபட்டு உயிர் பிரிந்தது

    கீழே விழுந்து அடிபட்டு உயிர் பிரிந்தது

    சென்னை, நுங்கம்பாக்கம், ஹாடோஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில், படுக்கை அறையில், கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு உயிரிழந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தகவல். பிரபல பின்னணி பாடகி உயிரிழந்த செய்தி அறிந்த திரையுலகினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

    சினிமாவில் அறிமுகம்

    சினிமாவில் அறிமுகம்

    1971ஆம் ஆண்டு வெளிவந்த 'குட்டி' (GUDDI) என்கிற பாலிவுட் படத்தில், வசந்த் தேசாயின் இசை அமைப்பில் 'போலே ரே பப்பி ஹரா' என்ற 'மியான் மல்ஹார்' ராகப் பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் வாணி ஜெயராம். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட 19 மொழிகளில் இவர் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி உள்ளார்.

    பத்ம பூஷன் அறிவிப்பு

    பத்ம பூஷன் அறிவிப்பு

    இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது இருந்த நிலையில், அந்த விருதை வாங்குவதற்கு முன்னதாகவே பாடகி வாணி ஜெயராம் இந்த உலகை விட்டு பிரிந்துச் சென்று விட்டார். அவரது மறைவை அறிந்த ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். திரையுலக பிரபலங்கள் மற்றும் இசையுலக ஜாம்பவான்கள் அனைவரும் வாணி ஜெயராம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவுகளை போட்டு வருகின்றனர்.

    தேசிய விருது

    தேசிய விருது

    'சங்கராபரணம்' படத்தில் இடம்பெற்ற 'மானஸ ஸஞ்சரரே', 'அபூர்வ ராகங்கள்' படத்தில் இடம்பெற்ற 'ஏழு ஸ்வரங்களுக்குள்', தெலுங்குப் படமான ஸ்ருதிலாயுலு படத்தில் இடம்பெற்ற 'ஆலோகயே ஸ்ரீ பாலகிருஷ்ணம்' ஆகிய பாடல்களுக்காக மூன்று முறை அகில இந்திய சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றவர் வாணி ஜெயராம்.

    English summary
    Legendary Playback Singer Vani Jayaram passes away at the ager of 78 due to ill health. Recently Indian Government announces Padma Bhusan award to her on Republic Day.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X