twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா பாதிப்பு.. சிகிச்சை பெற்று வந்த பிரபல மூத்த நடிகர் உயிரிழப்பு.. திரையுலகம் சோகம்!

    By
    |

    சென்னை: மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல நடிகர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

    பல்வேறு நாடுகளை பதம் பார்த்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த தொற்றைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    பாதித்து வருகிறது

    பாதித்து வருகிறது

    இந்த தொற்று, பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் உள்பட அனைவரையும் பாதித்து வருகிறது. இந்த தொற்றால் பல சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டனர். நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், தமன்னா, விஷால், பிருத்விராஜ், ஜெனிலியா உள்பட பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் மீண்டனர்.

    சோகத்தில் ஆழ்த்தியது

    சோகத்தில் ஆழ்த்தியது

    பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் கொரோனாவுக்காக மருத்துவமனையில் சேர்ந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவர் மறைவு தென்னிந்திய சினிமா மட்டுமின்றி, இந்தி சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியது. அவரை போல, மேலும் சில சினிமா துறையினர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.

    கவலைக்கிடமாக

    கவலைக்கிடமாக

    இந்நிலையில்,, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த பிரபல வங்காள நடிகர் செளமித்ர சாட்டர்ஜி உயிரிழந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த ஒரு மாதமாகச் சிகிச்சை பெற்று வந்தார். ஆரம்பத்தில் சிகிச்சை அவர் உடல் ஒத்துழைத்தது.

    சத்யஜித் ரே உடன்

    சத்யஜித் ரே உடன்

    பின்னர் கடந்த சில நாட்களாக உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருந்தது. இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 85. வங்காளத்தில் பிரபலமான நடிகரான இவர், பிரபல இயக்குனர் சத்யஜித் ரே வுடன் இணைந்து நடித்துள்ளார். ஏராளமான நாடகங்களிலும் நடித்துள்ளார்.

    தாதா சாகேப் பால்கே

    தாதா சாகேப் பால்கே

    தாதா சாகேப் பால்கே உள்பட பல உயரிய விருதுகளை அவர் பெற்றுள்ளார். இவர் மறைவு வங்காள ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மேற்குவங்க முதலமைச்சர், மம்தா பானர்ஜி உள்பட பலர், அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    அரசு மரியாதை

    அரசு மரியாதை

    மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள இரங்கலில், செளமித்ர சாட்டர்ஜியின் மறைவு பெரும் இழப்பு என்று கூறியுள்ள அவர், அவருடைய இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடக்கும் என்று தெரிவித்துள்ளார். ஏராளமான நடிகர், நடிகைகளும் சமூக வலைதளங்களில், செளமித்ர சாட்டர்ஜிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Veteran actor Soumitra Chatterjee died Sunday, at the age of 85, in Kolkata.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X