»   »  லென்ஸ் படத்துக்காக ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு 'சிறந்த இயக்குநர்' விருது!

லென்ஸ் படத்துக்காக ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு 'சிறந்த இயக்குநர்' விருது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பையில் நடந்த ஜாக்ரன் திரைப்பட விழாவில் லென்ஸ் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.

7வது ஜாக்ரன் திரைப்பட விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில் இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்படங்கள் பங்கேற்றன.

Lens wins best director Award for Jayaprakash Radhakrishnan

இந்த விழாவின் போட்டிப் பிரிவில் மாரிகொண்டவரு, வெய்ட்டிங், இறுதிச் சுற்று, பஹாதா ரா லுஹா, வைசாகி லிஸ்ட், சர்ப்ஜித், சோலை, தல்வார், ஏர்லிப்ட், மோர் மண் கி பாரம், நில் பட்டே சன்னாட்டா, பல்லா@ஹல்லா.காம், மிதிலா மகான், சதுரம், அர்ஷிநகர், நட்சாம்ராட் மற்றும் நீரஜா போன்ற படங்கள் பங்கேற்றன.

Lens wins best director Award for Jayaprakash Radhakrishnan

இவற்றில் லென்ஸ் படத்துக்கு சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்தது. படத்தின் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இந்த விருதினை நேரில் சென்று பெற்றுக் கொண்டார்.

Lens wins best director Award for Jayaprakash Radhakrishnan

இந்தியாவின் பிரபலமான படங்கள் பிரிவில், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய லென்ஸ், ஹன்ஸ்லால் மேத்தாவின் அலிகர், அபர்ணா சென்னின் அர்ஷிநகர், மேக்னா குல்ஸாரின் தல்வார், கேடி சத்யம் இயக்கிய பாலிவுட் டைரிஸ், பவுத்தாயன் முகர்ஜியின் தி வயலின் ப்ளேயர் போன்றவை திரையிடப்பட்டன.

Lens wins best director Award for Jayaprakash Radhakrishnan

இந்த விழாவின் தேர்வுக் குழுவில் நடிகை சரிகாவும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
LENS director Jayaprakash Radhakrishnan won the (Best Director award) in 7th Jagran Film Festival (JFF) which is held today in Mumbai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil