»   »  லென்ஸ்... ஒரு பர்ஃபெக்ட் த்ரில்லர்!

லென்ஸ்... ஒரு பர்ஃபெக்ட் த்ரில்லர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இணையம் என்பது இருபக்க கூரிய கத்தி மாதிரிதான். கவனமாகக் கையாளாவிட்டால் சேதாரம் நிச்சயம்.

இதைப் பொட்டிலடித்த மாதிரி சொல்லியிருக்கிறது ஒரு படம். அதுதான் 'லென்ஸ்'.

சில தினங்களுக்கு முன் இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பை கிடைத்தது. ஒன்றரை மணிநேரப் படம்தான்.

Lense.. a perfect thriller on the way!

ஸ்கைப்பில் ஒரு பெண்ணும் ஆணும் பேசிக் கொள்வது போல ஆரம்பிக்கிறது படம். ஆங்கிலத்தில் பேசிக் கொள்கிறார்கள். சற்று நேரம் செல்லச் செல்ல அந்த பேச்சின் விரசமும் வக்கிரமும் புரிகிறது.

அடுத்த சில நிமிடங்களில் ஒரு அதிர்ச்சி. ஸ்கைப்பில் பேசும் அந்த நபர் பெண்ணல்ல... 'நான் இப்போது சாகப் போகிறேன்.. அதை நீ பார்க்க வேண்டும். கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டும்' என்று கட்டளையிட, பேரதிர்ச்சி.

இவன் தற்கொலை செய்வதை அவன் ஏன் பார்க்க வேண்டும்? இந்தக் கேள்விக்கான விடை பார்வையாளர்களை இருக்கை நுனிக்கு வரவழைக்கும் ஷாக்!

மிகத் துணிச்சலான, ஆனால் புதிய முயற்சி. அதை தன் சொந்த செலவில் தயாரித்து இயக்கியிருப்பதால் நிச்சயம் துணிச்சலான முயற்சிதான்.

Lense.. a perfect thriller on the way!

தமிழ், மலையாளம் என கலந்துகட்டிப் பேசுகின்றன பாத்திரங்கள். ... பார்ப்பவர் எளிதில் கதைக்குள் பயணப்பட்டுவிடும்படியான திரைக்கதை. எனவே எந்தப் பாத்திரத்தையும் இயக்குநர் அறிமுகம் செய்யாமல் போகிற போக்கில் புரிந்து கொள்ளுங்கள் என விட்டுவிடுகிறார்.

படத்தில் ஹீரோவும் ஜெயப்பிரகாஷ். யார் இந்த ஜெபி? என்று கேட்பவர்களுக்கு... என்னை அறிந்தால் படம் பார்த்திருக்கிறீர்களா... அதில் காணாமல் போகும் தன் குழந்தையை மீட்டுத் தருமாறு அஜீத்திடம் கதறுவாரே... அவர்தான் இந்த ஜெயப்பிரகாஷ்.

இரண்டு பெண்கள். ஒருவர் மிஷா கோஷல், இன்னொருவர் அஸ்வதி லால். இருவருமே அந்தந்த பாத்திரங்களாக மாறியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் உயிர்நாடியாக வரும் பாத்திரம் ஆனந்த்சாமி. அந்தப் பாத்திரம் பற்றிச் சொன்னால் படத்தின் ரகசியம் பாதிக்கப்படும். அதனால் திரையில் பார்த்து அவரது நடிப்பை அனுபவியுங்கள்.

இடைவேளைக்குப் பின் வரும் காட்சிகளில் மகா விறுவிறுப்பு. சுப்பிரமணியபுரம் எஸ் ஆர் கதிரின் ஒளிப்பதிவும், ஜெய்னுல் ஆபுதீன், காஜின் எடிட்டிங்கும் அந்த விறுவிறுப்பில் முக்கியப் பங்கு வகித்துள்ளன.

Lense.. a perfect thriller on the way!

பின்னணி இசை தந்திருப்பவர் சித்தார்த் விபின். இந்தப் படத்தின் கோ புரொட்யூசரும்கூட!

இந்தப் படம் சரியான முறையில் வெளியானால் வசூலில் மட்டுமல்ல, சர்வதேச திரைப்பட விழாக்களின் கவனத்தையும் ஈர்க்கும். தமிழ் சினிமாவின் பிரமாண்ட வெளியீட்டாளர்கள் யாராவது முன்னெடுத்துச் செய்தால் படம் சீக்கிரமே வர வாய்ப்பிருக்கிறது!

English summary
Here is preview of Jayaprakash directed Lense, a psycho thriller.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil