»   »  வாங்க, ரஜினி ரசிகர்களின் மெக்கா வரை போய்ட்டு வருவோம்!

வாங்க, ரஜினி ரசிகர்களின் மெக்கா வரை போய்ட்டு வருவோம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி ரசிகர்களின் மெக்கா என்று அழைக்கப்படும் ஆல்பர்ட் தியேட்டர் விழாக் கோலம் பூண்டுள்ளதில் ஆச்சரியம் இல்லை.

சூப்பர் ஸ்டாரின் கபாலி படம் இன்று பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியானதால் படத்தை பார்த்தவர்களில் சிலர் ஓவரா எதிர்பார்த்துவிட்டோமோ என்று கூறுகிறார்கள்.

ரஜினி ரசிகர்களோ தலைவர்டா, நெருப்புடா என்று பெருமையாக பேசுகிறார்கள்.

ஆல்பர்ட் தியேட்டர்

ரஜினி ரசிகர்களின் மெக்கா எனப்படும் சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் கபாலி ரிலீஸையொட்டி மேளதாளத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ரசிகர்கள்

ஆல்பர்ட் தியேட்டரில் ரஜினி ரசிகர்கள் கட்அவுட்டுகள், பேனர்கள் வைத்து அசத்திவிட்டனர். தியேட்டர் வாசலில் திரும்பும் பக்கம் எல்லாம் கபாலி தான்.

மெகா கட்அவுட்

ஆல்பர்ட் தியேட்டரில் கபாலி ரஜினிக்கு மெகா கட்அவுட்டை வைத்துள்ளனர் ரசிகர்கள். அந்த கட்அவுட்டுக்கு பாலாபிஷேகமும் செய்துள்ளனர்.

கபாலி டிசர்ட்

கபாலி படம் பார்க்க வந்த ரசிகர்கள் ரஜினியின் புகைப்படம் உள்ள செட் டிசர்ட் அணிந்து வந்தனர். தியேட்டரில் சீரியல் விளக்குகளால் ஆன பிரமாண்ட ரஜினி கட்அவுட்டும் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Albert theatre, known as Mecca of Rajini fans look very colourful as Kabali got released today.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil