»   »  2.ஓ மூலம் இந்திய சினிமா என்னவென்பதை உலகுக்குக் காட்டுவோம்! - லைகா

2.ஓ மூலம் இந்திய சினிமா என்னவென்பதை உலகுக்குக் காட்டுவோம்! - லைகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கும் 2.ஓ படத்தின் மூலம் இந்திய சினிமா என்னவென்பதை உலகுக்குக் காட்டுவோம் என்று லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்ஸன், அக்ஷய் குமார் நடித்துவரும் படம் 2.ஓ (2.O). இந்தப் படத்தின் 75 சதவீதப் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

Lets show the world what Indian cinema is capable with Superstar vs Khiladi! - Lyca

ரூ 350 கோடி செலவில் பிரமாண்டத்தின் உச்சமாக தயாரிக்கப்பட்டு வரும் இந்தப் படத்தின் டிசைன், படங்கள் என எதுவுமே வெளியாகாமல் ரகசியம் காத்து வருகிறார்கள்.

படத்தின் முதல் தோற்ற வடிவமைப்பை வரும் நவம்பர் 20-ம் தேதி வெளியிடப் போவதாக சில தினங்களுக்கு முன்புதான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

Lets show the world what Indian cinema is capable with Superstar vs Khiladi! - Lyca

இந்த நிலையில் நேற்று லைகா நிறுவன நிர்வாகி ராஜு மகாலிங்கம் விடுத்துள்ள செய்தியில், "இந்திய சினிமா என்னவென்று உலகுக்குக் காட்டும் நேரம் நெருங்கி விட்டது. இன்னும் ஒரு மாதம்தான். சூப்பர் ஸ்டாரும் கிலாடியும் இந்திய சினிமா என்னவென்று உலகுக்குக் காட்டுவார்கள்... கவுன்ட் டவுன் ஆரம்பித்துவிட்டது," என்று கூறியுள்ளார்.

அந்தத் தேதியில் அநேகமாக படத்தின் டீசரும் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

English summary
Lyca Production Raju Mahalingam says in a tweet, "let's show the world what Indian cinema is capable of...Superstar vs Khiladi 2.O".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil