அந்த இரவில் வடிவேலு ஃபுல் போதை.. விஜயகாந்த்தை அப்படி பேசியதற்கு என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: தமிழ்நாட்டில் நடந்த 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையின்போது விஜயகாந்த் பற்றி வடிவேலு தரக்குறைவாக பேசியதுதான் அப்போதைக்கு தலைப்பு செய்தியாக இருந்தது. அதற்கு பிறகு கேப்டனும், வைகைப்புயலும் பேசிக்கொள்ளவே இல்லை. விஜயகாந்த் உயிரிழந்ததற்குகூட வடிவேலு நேரிலோ, அறிக்கையிலோ இரங்கல் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட்டில் ராஜ்கிரணால் அறிமுகப்படுத்தப்பட்டு தனது திறமையாலும் வளர்ந்தவர் வடிவேலு. ராஜ்கிரண் அறிமுகப்படுத்தினாலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் திண்டாடினார் அவர். அப்படிப்பட்ட நிலைமையில்தான் சின்னக்கவுண்டர் படத்தில் நடிக்கும் சான்ஸ் கிடைக்க; அதற்கு கவுண்டமணி முட்டுக்கட்டை போட பார்த்தார். ஆனால் விஜயகாந்த் தலையிட்டு பேசி சமாதானம் செய்து வடிவேலுவை நடிக்க வைத்தார்.

பிரச்னை: அதற்கு பிறகு வடிவேலு நடித்தது; கோலிவுட்டில் தவிர்க்க முடியாத கலைஞராக வளர்ந்தது எல்லாம் அனைவருமே அறிந்ததுதான். சூழல் இப்படி இருக்க திடீரென விஜயகாந்த்துடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க ஆரம்பித்தார் வடிவேலு. நாளடைவில் சரியாகிவிடும் என்றுதான் கேப்டனின் தரப்பு நினைத்தது. ஆனால் அது திவீரமாகி அரசியல் மேடையில் ஏறி இஷ்டத்துக்கு பேசினார். இதனால் விஜயகாந்த் - வடிவேலு உறவில் நிரந்தரமான விரிசல் விழ ஆரம்பித்தது.

Liaquat Ali Khan says Vadivelu came drunk during the dispute with Vijayakanth
Photo Credit:

மரணத்துக்கு வரவில்லை: காலப்போக்கில் வடிவேலு ஓரங்கட்டப்பட்டு மீண்டும் நடிக்க வந்தார். விஜயகாந்த் உடல்நல குறைவால் உயிரிழந்துவிட்டார். அவரது உயிரிழப்புக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடுமே கண்ணீர் சிந்தியது. மாநிலம் முழுவதுமிலிருந்து ஏராளமானோர் சென்னைக்கு நேரில் சென்று கேப்டனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால் வடிவேலு நேரிலும் வரவில்லை; அறிக்கையின் மூலமும் இரங்கல் தெரிவிக்கவில்லை. இது பெரிய பேசுபொருளானது.

விஜயகாந்த் மகன்: சமீபத்தில்கூட விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன் ஒரு விழாவில் பேசுகையில், "எங்களது சொந்த மாமாவை எப்படி பார்த்தோமோ அதேபோல்தான் வடிவேலு மாமாவை சின்ன வயதில் பார்த்தோம். ஆனால் அவர் எங்களை ஏமாற்றிவிட்டு போய்விட்டார். அந்த சின்ன வயதிலேயே துரோகத்தை பார்த்துவிட்டோம். அதனால் இப்போது யார் என்ன செய்தால் என்ன என்று இருக்கிறது" என குறிப்பிட்டிருந்தார்.

லியாகத் அலிகான் பேட்டி: இந்நிலையில் பிரபல திரைக்கதை ஆசிரியரும், இயக்குநருமான லியாகத் அலிகான் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "ஒரு மரணத்துக்காக வந்திருந்த விஜயகாந்த்தின் ரசிகர்கள் வடிவேலுவின் ஆஃபிஸ் முன்பு கார்களை பார்க் செய்தார்கள். அது ஒரு இரவு நேரம். அந்த நேரத்தில் வடிவேலு கொஞ்சம் சரியில்லாத நிலைமையில்தான் வந்தார். அப்படி வந்தவர் அவர்களை பார்த்து இஷ்டத்துக்கும் பேசிவிட்டார். உடனே ரசிகர்கள் வடிவேலுவை அடிக்க போய்விட்டார்கள். இந்த பிரச்னையை அப்போதைய திமுக அரசு சரி செய்தது.

அவரிடம் கேட்டேன்: பிறகு அவர் மேடையேறி விஜயகாந்த்தை பற்றி இஷ்டத்துக்கு பேசினார். ஒரு படத்துக்காக கால்ஷீட் வாங்க வடிவேலுவை சந்தித்தேன். அப்போது போனவுடனேயே இந்த டாபிக்கைத்தான் பேசினேன். ஏன் விஜயகாந்த்தை பற்றி ஊர் ஊரா போய் இப்படி பேசுற?; நல்ல மனிதரான அவரை மக்கள் முன்பு இப்படி தவறாக பேசுனியே இதெல்லாம் நல்லதா?. தகராறு நடந்த அன்னைக்குதான் குடித்துவிட்டு வந்து பேசுன. அப்புறமும் ஏன் இப்படி என் அகேட்டேன். அதற்கு அவரோ, 'அண்ணே ஏதோ பேசிட்டேன் அண்ணே' என சமாளித்தார். கூட்டத்தில் கை தட்டு விழுந்ததால் வடிவேலு என்னவெல்லாமோ பேசிவிட்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X