மாதம்பட்டி ரங்கராஜை சுத்துப்போடும் ஜாய் கிரிஸில்டா.. முதல் மனைவி ரூட்டை பிடிச்சிட்டாரே.. இனி பிரச்னைதான்
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ஜாய் கிரிஸில்டா அவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அப்போதிருந்து இந்தப் பிரச்னை பெரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஜாய் விரைவில் குழந்தையை பெற்றெடுக்கவிருக்கிறார். இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்; பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுடன் பழகினார். அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது. இரண்டாவது திருமணம் செய்தாலும் முதல் மனைவி ஸ்ருதியை அவர் விவாகரத்து செய்யவில்லை. இந்த விஷயம் ஜாய்க்கு தெரியவே இல்லை என்றுதான் தெரிகிறது. சூழல் இப்படி இருக்க நிகழ்ச்சி ஒன்றில் தனது முதல் மனைவியுடன் கலந்துகொண்டார் மாதம்பட்டியார்.
புகார் கொடுத்த கிரிஸில்டா: இந்த விவகாரம் ஜாய் கிரிஸில்டாவுக்கு பெரிய கோபத்தை உண்டு செய்திருந்தது. அதனையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த அவர்; மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டார். மேலும் அவரால்தான் நான் கர்ப்பமாக இருக்கிறேன். எனது குழந்தைக்கு அவர்தான் பொறுப்பு என்று குறிப்பிட்டிருந்தார். இந்த விஷயம் மிகப்பெரிய பரபரப்பை கோலிவுட் வட்டாரத்தில் கிளப்பியது.

நீதிமன்றம் காட்டிய அதிரடி: தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார் ஜாய். இதனால் பதறிய ரங்கராஜ் உடனடியாக நீதிமன்றத்துக்கு சென்று, 'வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும். என்னை பற்றி பேசுவதற்கும் தடை விதிக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருந்தார். இத்னை விசாரித்த நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது. இதனால் ஜாய் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்தார்.
விடாத ஜாய் கிரிஸில்டா: சும்மாவே ஆடும் ஜாய் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து உச்சக்கட்டமாக பதிவுகளை போட ஆரம்பித்தார். இதற்கிடையே கடந்த வாரத்தில் காவல் துறையினர் ஜாய் கிரிஸில்டாவிம் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தியது. மிகவிரைவில் மாதம்பட்டி ரங்கராஜிடமும் அவர்கள் விசாரணை நடத்தவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபக்கம் இருக்க தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மாதம்பட்டியாரை தாக்கி தொடர்ந்து பதிவுகளை போட்டபடி இருக்கிறார் ஜாய். அது மிகப்பெரிய கவனத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்திவருகிறது.
வழக்கறிஞரான ஜாய் கிரிஸில்டா?: இந்நிலையில் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் புதிய பதிவு ஒன்றை போட்டிருக்கிறார் அவர். அதாவது தனது பயோவில், Law Student என்பதை சேர்த்திருக்கிறார். மேலும் தனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ரங்கராஜ் விஷயத்தில் எப்படியாவது நீதியை பெற்றுவிட வேண்டும் என்று போராடும் அவர்; ஒருபடி மேலே சென்று சட்டப்படிப்படை படிக்க ஆரம்பித்துவிட்டாரே என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். மேலும் முதல் மனைவி ஸ்ருதியும் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











