»   »  ஆக்ஷன் ஜாக்சனின் 10 நாள் வசூலை மூன்று தினங்களில் முறியடித்த லிங்கா!

ஆக்ஷன் ஜாக்சனின் 10 நாள் வசூலை மூன்று தினங்களில் முறியடித்த லிங்கா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படம் வசூலில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.

கடந்த 12-ந் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம், பிரபு தேவா இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்து வெளியான ஆக்ஷன் ஜாக்ஸனின் 10 நாள் வசூலை மூன்றே நாட்களில் மிஞ்சிவிட்டது.

ரஜினி 4 வருடங்களுக்கு பிறகு நடித்து நேரடி படமாக வந்ததால் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள். தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு டிக்கெட்களும் விற்று தீர்ந்தன.

முதல் நாள் மட்டும் ரூ. 37 கோடி வசூல் குவித்து சாதனை படைத்தது. சிறப்பு காட்சிகள் மூலமும் வசூல் குவிந்தது. உலகம் முழுவதும் மூன்று நாட்களில் லிங்கா படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

எந்திரன் வசூலை மிஞ்சுமா?

எந்திரன் வசூலை மிஞ்சுமா?

இதற்கு முன் விஸ்பரூபம் படத்தின் அமெரிக்க வசூலை இந்த படம் முறியடித்து உள்ளது. 1.3 மில்லியன் டாலர் வசூல் செய்து அமெரிக்காவில் தமிழ் பட வரிசையில் 2 வது இடத்தை பிடித்து உள்ளது. எந்திரன் தற்போது வரை முதல் இடத்தில் உள்ளது. லிங்கா தொடரந்து இதே வசூல் ஈட்டினால் எந்திரன் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.

வெளிநாடுகளில்

வெளிநாடுகளில்

இங்கிலாந்தில் 1,71,086 யூரோ,மலேசியாவில் 1,263,060 ரிங்கட், வசூலாகி உள்ளது. படத்தின் நீளம் கருதி லிங்கா திரைப்படம் 10 நிமிடக் காட்சிகள் குறைக்கப்பட்டன. இப்போது இன்னும் விறுவிறுப்பாக உள்ளதால், அதே கூட்டம் தொடர்கிறது.

ஆக்ஷன் ஜாக்ஸன்

ஆக்ஷன் ஜாக்ஸன்

நடிகரும் டைரக்டருமான பிரபுதேவா இயக்கத்தில் கஜோலின் கணவர் அஜய் தேவ்கான் நடிப்பில் உருவான ஆக்‌ஷன் ஜாக்சன் படம் வெளியாகி உலக அளவில் ஓடிகொண்டு இருக்கிறது. ஆக்‌ஷன் ஜாக்சன் படத்தின் 10 நாள் வசூலை லிங்கா மூன்றே நாட்களில் முறியடித்துவிட்டது.

அமெரிக்காவில்

அமெரிக்காவில்

இரண்டாவது வாரமாக ஓடும் ஆக்‌ஷன் ஜாக்சன் அமெரிக்காவில் 10 நாட்களில் 1,85,807 டாலர் வசூலித்துள்ளது. அதாவது இந்திய பணத்தில் ரூ1.16 கோடி. இதை விட 7 மடங்கு வசூலை 3 நாட்களில் லிங்கா படம் வசூலித்து சாதனைப் படைத்து உள்ளது. லிங்கா படம் 3 நாட்களில் 1,376, 406 டாலர். அதாவது ரூ.8.41 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.

இங்கிலாந்தில்

இங்கிலாந்தில்

இங்கிலாந்தில் ஆக்‌ஷன் ஜாக்சன் 20 தியேட்டர்கள் இரண்டாவது வாரத்தில் 10,568 யூரோ இந்திய பணத்தில் 92.19 லட்சம் வசூல் செய்து உள்ளது. லிங்கா 36 தியேட்டர்களில் திரையிடப்பட்டு 3 நாட்களில்,71,068 யூரோ அதாவது ரூ1.68 கோடி வசூல் செய்துள்ளது.

சர்வதேச அளவில்

சர்வதேச அளவில்

சர்வதேச அளவில் ஆக்‌ஷன் ஜாக்சன் 10 நாட்களில் சுமார் 50,395 டாலர் அதாவது ரூ10.77 கோடி வசூல் செய்து உள்ளது. லிங்கா 3 நாட்களில் 1.95 லட்சம் டாலர் அதாவது ரூ12.39 கோடி வசூல் செய்து சாதனை புரிந்து உள்ளது.

English summary
Rajinikanth starrer Lingaa has beaten Ajay Devgan's Action Jackson 10 days collection in just 3 days in overseas.
Please Wait while comments are loading...