»   »  உலக அளவில் அதிக வசூல் குவித்த தமிழ்ப் படங்களில் லிங்காவுக்கு மூன்றாம் இடம்!

உலக அளவில் அதிக வசூல் குவித்த தமிழ்ப் படங்களில் லிங்காவுக்கு மூன்றாம் இடம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சர்வதேச அளவில் வசூல் குவித்த தமிழ்ப் படங்களில் ரஜினி நடித்து சமீபத்தில் வெளியான லிங்காவுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சோனாக்ஷி, அனுஷ்கா நடித்து டிசம்பர் 12-ல் வெளியான லிங்கா வெளிநாடுகளில் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டுள்ளது.

அமெரிக்காவில் இந்தப் படத்துக்கு வசூலில் இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

வெளியான அனைத்து நாடுகளிலும் வசூலான தொகை அடிப்படையில், இந்தப் படம் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. இன்னும் ஓடிக் கொண்டிருப்பதால் இந்த இடம் மாறும் என்று தெரிகிறது.

முதல் இடம் எந்திரனுக்கு...

முதல் இடம் எந்திரனுக்கு...

சர்வதேச அளவில் அதிக வசூல் குவித்த தமிழ்ப் படங்களில் முதலிடத்தில் உள்ளது ரஜினியின் எந்திரன். இந்தப் படம் மொத்தம் 12 மில்லியன் டாலர்களைக் குவித்துள்ளது. வெளியான நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த சாதனையை வேறு படங்களால் தொடக்கூட முடியவில்லை.

சிவாஜி

சிவாஜி

ரஜினி நடிப்பில் வெளியான சிவாஜிக்குத்தான் இரண்டாம் இடமும் கிடைத்துள்ளது. இந்தப் படம் அனைத்து நாடுகளிலும் சேர்த்து 8 மில்லியன் டாலர்களைக் குவித்துள்ளது.

மூன்றாம் இடத்தில் லிங்கா

மூன்றாம் இடத்தில் லிங்கா

லிங்காவுக்கு இந்த வரிசையில் மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. இதுவரை 6 மில்லியன் டாலர்கள் இந்தப் படத்துக்கு வசூலாகியுள்ளது. இந்த வாரம் முழுக்க ஓடி முடிந்தால், அநேகமாக சிவாஜியின் வசூல் தொகைக்கு இணையாக வரக்கூடும் என கணிக்கப்படுகிறது.

கத்தி

கத்தி

விஜய் நடித்த கத்திக்கு இந்த டாப் 5 படங்களின் வரிசையில் ஒரு இடம் கிடைத்துள்ளது. 5.7 மில்லியன் டாலர்கள் ஈட்டி நான்காம் இடத்தில் உள்ளது இந்தப் படம்.

தசாவதாரம்

தசாவதாரம்

கமல் நடித்த தசாவதாரம் 5.2 மில்லியன் டாலர்கள் வசூலித்து ஐந்தாம் இடத்தைப் பெற்றுள்ளது.

English summary
Rajinikanth's Lingaa is becoming 3rd position in the overseas top grosser Tamil movies list.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil