»   »  'பிகே' வருகையால் பெங்களூருவில் தியேட்டர்களை இழந்த லிங்கா

'பிகே' வருகையால் பெங்களூருவில் தியேட்டர்களை இழந்த லிங்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கிறிஸ்துமஸ் திரைப்படங்களின் வருகையால், பெங்களூருவில் சில தியேட்டர்களில் லிங்கா திரைப்படம் தூக்கப்பட்டுள்ளது, சிலவற்றில் காட்சி நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 30க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் கடந்த 12ம்தேதி லிங்கா திரைப்படம் வெளியானது. ஆனால், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, பல்வேறு புதுப்படங்கள் இந்த வார வெள்ளிக்கிழமை திரைக்கு வந்துள்ளன. இதையடுத்து லிங்காவுக்கான கூட்டம் குறைந்துள்ளது.

எனவே ஊர்வசி போன்ற முன்னணி தியேட்டர்களில் கூட லிங்கா படத்தை தூக்கிவிட்டனர். அங்கு ஆமீர்கான் நடித்த பிகே திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

Lingaa screens allotted for other movies

பன்னேருகட்டா ரோட்டிலுள்ள கோபாலன் சினிமாஸ் திரையரங்கில் 2 காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன. பிரிகேட் ரோடு ரெக்ஸ், கோனகுண்டே மானசா, ஒயிட்பீல்டு, கியூ சினிமாஸ் போன்றவற்றில் ஒரு காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டுள்ளன.

கன்னிங்காம் ரோடு ஃபன் சினிமாஸ், மைசூர் ரோடு கோபாலன் சினிமாஸ், போன்றவற்றில் இரு காட்சிகள் மட்டுமே திரையிடப்படுகின்றன. பல தியேட்டர்கள் இரவு நேர காட்சியை ரத்து செய்துள்ளன.


மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில்கூட லிங்காவுக்கான கட்டணம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

English summary
Lingaa screens allotted for other movies like PK in Bengaluru.
Please Wait while comments are loading...