»   »  லிங்கா கதை வழக்கு... இன்றும் விசாரணை தொடர்கிறது

லிங்கா கதை வழக்கு... இன்றும் விசாரணை தொடர்கிறது

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: லிங்கா கதை வழக்கின் விசாரணை மதுரை நீதிமன்றத்தில் இன்றும் தொடர்கிறது.

மதுரையை சேர்ந்த ரவிரத்தினம் என்பவர், தனது முல்லைவனம் 999 என்ற கதையை அனுமதியின்றி பயன்படுத்தி ரஜினி நடித்த லிங்கா படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மதுரை கூடுதல் மாவட்ட முன்சீப் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

Lingaa story case hearing today

இந்த மனு மீதான விசாரணை கூடுதல் மாவட்ட முன்சீப் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அதன்பேரில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர் தரப்பில் லிங்கா படத்தின் கதையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். நீதிபதி விஸ்வநாதன் வழக்கு விசாரணையை இன்றைய தேதிக்கு (9-ந் தேதி) ஒத்தி வைத்தார்.

English summary
Madurai Munsif court has ordered to inquire Lingaa story case today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil