»   »  லிங்கா கதை வழக்கு... வக்கீல் ஆணையமெல்லாம் அமைக்க முடியாது!- நீதிமன்றம்

லிங்கா கதை வழக்கு... வக்கீல் ஆணையமெல்லாம் அமைக்க முடியாது!- நீதிமன்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: ரஜினி நடித்த லிங்கா மற்றும் முல்லைவனம் 999 படக் கதைகளை ஆய்வு செய்ய வக்கீல்கள் ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

லிங்கா திரைப்படத்தின் கதை வழக்கு மதுரை மாவட்ட கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.


Lingaa story case: Madurai court dismissed a petition

இந்த இரு திரைப்படங்களின் கதைகளையும் ஆய்வு செய்ய 10 வக்கீல்கள் அடங்கிய ஆணையம் அமைக்க வேண்டும் என முல்லைவனம் 999 படத்தின் இயக்குநர் ரவிரத்தினம் மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனு நீதிபதி விஸ்வநாத் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, லிங்கா திரைப்படக் குழுத் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், இந்த வழக்கு விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் இயக்குநர் ரவிரத்தினம் தொடர்ந்து ஒவ்வொரு மனுக்களாக தாக்கல் செய்து வருகிறார். இதனால், நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது. எனவே, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.


இதைப் பதிவு செய்த நீதிபதி, இயக்குநர் ரவிரத்தினம் தரப்பில் வக்கீல் ஆணையம் அமைக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, மனு மீதான விசாரணையை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

English summary
The Madurai Court has dismissed the petition of Ravirathnam to set up an advocate commission to scrutinise the stories of Rajini starrer Lingaa and Mullaivanam 999.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil